பா.ஜ.க.வில் முதல்வரின் மகன் முதல்வர் ஆக முடியாது, சாதரண தொண்டன் முதல்வர், பிரதமர், ஜனாதிபதி ஆகலாம்.. கிஷன் ரெட்டி

 
கடந்த 70 ஆண்டுகளாக லடாக்கிற்கு கொடுத்த பணத்தை கொள்ளையடித்த காங்கிரஸ்…. கிஷன் ரெட்டி குற்றச்சாட்டு

பா.ஜ.க.வில் முதல்வரின் மகன் முதல்வர் ஆக முடியாது, நம்மிடம் ஜனநாயகம் உள்ளது. ஒரு சாதரண தொண்டன் கூட முதல்வர், பிரதமர் மற்றும் குடியரசு தலைவராகிறார் என மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்தார்.


மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி கூறியதாவது: தெலங்கானா மாநிலத்தில் சீரழிந்த அரசியலில் மாநில முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் ஈடுபடுகிறார். தெலங்கானா ராஷ்டிர  சமிதி ஆட்சியை இழக்க நேரிடும் என பயப்படுகிறது. அதனால்தான் அவர்கள் எங்களுக்கு எதிராக விளம்பரம் செய்ய பொதுமக்கள் பணத்தை தவறாக பயன்படுத்துகிறார்கள்.

கே.சந்திரசேகர் ராவ்

நாம் ஊழல் மற்றும் குடும்ப ஆட்சி செய்யவில்லை. பா.ஜ.க.வில் முதல்வரின் மகன் முதல்வர் ஆக முடியாது, நம்மிடம் ஜனநாயகம் உள்ளது. ஒரு சாதரண தொண்டன் கூட முதல்வர், பிரதமர் மற்றும் குடியரசு தலைவராகிறார். இது போன்ற ஊழல் கட்சிகளிடம் இருந்து நாம் பாடம் கற்க தேவையில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பா.ஜ.க.

தெலங்கானாவில் நேற்று பா.ஜ.க.வின் செயற்குழு கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தில் தென்இந்தியாவில் குறிப்பாக தெலஙகானாவில் பா.ஜ.க.வின் வளர்ச்சி குறித்த விவாதங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடி, அமித் ஷா என பா.ஜ.க.வின் பெரிய தலைவர்கள் அனைவரும் இந்த கூட்டத்தில் பங்கேற்பதால் பா.ஜ.க.வின் செயற்குழு கூட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.