குலாம் நபி இப்போது ஆசாத் ஆனார் ஆனால் அமேதி நீண்ட காலத்துக்கு முன்பே விடுதலை கிடைத்து விட்டது.. ஸ்மிருதி இராணி

 
ட்விட்டர் ராணியாக மாறிய மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி

குலாம் நபி ஆசாத் இப்போது ஆசாத் (சுதந்திரம் அல்லது விடுதலை) ஆனார் ஆனால் அமேதி நீண்ட காலத்துக்கு முன்பே காங்கிரஸிடமிருந்து விடுதலை பெற்று விட்டது என்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி கிண்டலாக காங்கிரஸை தாக்கினார்.

சுமார் 50 ஆண்டுகள் காங்கிரஸ் கட்சியில் பயணித்த அந்த கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் அந்த கட்சியிலிருந்து வெளியேறியது  அரசியலில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது குலாம் நபி ஆசாத் காங்கிரஸிலிருந்து வெளியேறியது தொடர்பாக ஸ்மிருதி இராணியிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு ஸ்மிருதி இராணி கூறியதாவது: 

சூடு பிடிக்கும் கடித விவகாரம்….. குலாம் நபி ஆசாத்தை குறிவைக்கும் காங்கிரஸ்காரர்கள்

காங்கிரஸின் சொந்த தலைமை குறிப்பாக காந்தி குடும்பத்தை பற்றி கருத்து தெரிவிக்கிறது. எனவே நாங்கள் அதில் எதையும் சேர்க்க தேவையில்லை. குலாம் நபி ஆசாத் இப்போது ஆசாத் (சுதந்திரம்) ஆனார், ஆனால் அமேதி நீண்ட காலத்துக்கு முன்பே (காங்கிரஸிடம் இருந்து) விடுதலை பெற்று விட்டது. முந்தைய அமேதிக்கும் இன்றைய அமேதிக்கும் உள்ள வித்தியாசம் என்னவெனில், முந்தைய மக்கள் இங்கு அதிகாரத்தை தங்களது சாம்ராஜ்யமாக கருதினர். ஆனால் இப்போது அங்கு சேவை உணர்வு உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ராகுல் காந்தி
2019 மக்களவை தேர்தலில் ஸ்மிருதி இராணி அமேதி நாடாளுமன்ற தொகுதியில் ராகுல் காந்தியை தோற்கடித்தார். அதேதான் நீண்ட காலத்துக்கு முன்பே அமேதி விடுதலை பெற்றது என்று ஸ்மிருதி இராணி குறிப்பிட்டுள்ளார். அமேதி தொகுதி காந்தி குடும்பத்தின் பாரம்பரியமான இடமாக இருந்தது. கடந்த காலத்தில் சஞ்சய் காந்தி, ராஜீவ் காந்தி, சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரால் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டது.