உலகில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்த பிறகு பொருளாதார மந்தநிலையை பற்றி பேசுங்க.. ராகுலுக்கு பதிலடி கொடுத்த பா.ஜ.க.

 
ராகுல் காந்தி

உலகில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொண்ட பிறகு பொருளாதார மந்தநிலையை பற்றி பேசுங்க என்று ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி பதிலடி கொடுத்தார்.

டெல்லி ராம்லீலா மைதானத்தில் பணவீக்கத்துக்கு எதிராக காங்கிரஸின் பணவீக்கம் குறித்து பேசுங்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசுகையில், விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் மற்றும் இந்தியா-சீனா எல்லை பதற்றம் போன்ற பிரச்சினைகளில் பிரதமர் நரேந்திர மோடி கண்மை மூடிக்கொண்டு இருக்கிறார். இந்தியாவில் வெறுப்பு அதிகரித்து வருகிறது. 

மோடி

பணவீக்கம் மற்றும் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக வெறுப்பு அதிகரித்து வருகிறது. பா.ஜ.க.வும், ஆர்.எஸ்.எஸ்ஸூம் நாட்டை பிரித்து நாட்டில் அச்சத்தை உருவாக்குகிறார்கள். இந்த அச்சம் மற்றும் வெறுப்பால் நாட்டில் இரண்டு தொழிலதிபர்கள் மட்டுமே பயனடைகிறார்கள் என தெரிவித்தார். ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி பதிலடி கொடுத்தார்.

பிரகலாத் ஜோஷி
மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறுகையில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் நிகழ்ந்த பொருளாதார மந்தநிலை என்ன? இன்று அது என்ன? உலகத்துக்கும், இந்தியாவுக்கும் என்ன வித்தியாசம்? பொருளாதார மந்தநிலையை குறைக்க என்ன நடந்தது மற்றும் உலகில் என்ன நடக்கிறது? உக்ரைன்-ரஷ்யா போருக்கு பிறகு உலகில் என்ன நடக்கிறது மற்றும் இந்தியாவில் என்ன  பேசப்படுகிறது என்பதை கண்டறிந்து ராகுல் காந்தி பேச வேண்டும் என தெரிவித்தார்.