பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் சுதந்திரமான காஷ்மீர் -கேரள எம்.எல்.ஏ... துரோகி என்ற மத்திய அமைச்சர்

 
பிரகலாத் ஜோஷி

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை சுதந்திரமான காஷ்மீர் என்ற கேரள  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ. கே.டி. ஜலீலை துரோகி என்று மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி குற்றம் சாட்டினார்.

கேரளாவை சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ. கே.டி. ஜலீல் கடந்த சில தினங்களுக்கு முன் தனது பேஸ்புக் பக்கத்தில், பாகிஸ்தானுடனான காஷ்மீர் பகுதி  ஆசாத் (சுதந்திரமான) காஷ்மீர் அழைக்கப்பட்டது. இந்த பகுதியில் பாகிஸ்தான் அரசுக்கு நேரடி செல்வாக்கு இல்லை. பணமும், ராணுவ உதவியும் மட்டுமே பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் இருந்தது. ஆசாத் காஷ்மீருக்கு சொந்த ராணுவம் இருந்தது. குடியரசு தலைவர் ஜியா உல் ஹக் காலத்தில் ராணுவம் பொதுவானதாகி விட்டது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் எந்த பெரிய நிர்வாக அதிகாரமும் பாகிஸ்தான் அரசுக்கு இல்லை. அதிக அளவில் படைகள் குவிக்கப்படுவது காஷ்மீரின் சாரத்தையே மாற்றி விட்டது. 

கே.டி. ஜலீல்

காஷ்மீர் பள்ளத்தாக்கில் இயல்பு நிலை ஏற்படுமா காஷ்மீரிகள் ஏங்ககிறார்கள். காஷ்மீரை இரண்டாக பிரித்ததற்காக மத்திய அரசுக்கு எதிராக காஷ்மீர் மக்களிடையே கோபம் நிலவுவதை கண்டேன். துப்பாக்கிகளுடன் ராணுவ வீரர்களையே நீங்கள் எங்கும் பார்க்கலாம். காஷ்மீரிகள் சிரிக்க மறந்து விட்டார்கள் போல் தெரிகிறது. பல தசாப்தங்களாக காஷ்மீரின் நிறம் பச்சை. அனைத்து அரசியல்வாதிகளும் வீட்டுக் காவலில் உள்ளனர். மாதக்கணக்கில் அரசியல் நடவடிக்கைகள் இல்லை. மோடி அரசு தனது இரண்டாவது ஆட்சிக் காலத்தில் காஷ்மீரை மூன்றாக பிரித்துள்ளது. 370வது சட்டப்பிரிவை ரத்து செய்ததன் மூலம் அதன் நோக்கங்களை நிறைவேற்ற முடிந்ததா?  இயல்பு நிலைக்கு திரும்புவோம் என்று காஷ்மீர் மக்கள் நம்புகிறார்கள். இவ்வாறு பதிவு செய்து இருந்தார். 

காஷ்மீர்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை சுதந்திர காஷ்மீர் என்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ. கே.டி. ஜலீலை துரோகி என்று மத்திய அமைச்சர் கூறினார். மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறுகையில், அவர்கள் காங்கிரஸ் அல்லது கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்து செயல்படுகிறார்கள். அவர்கள் எதிர்வினையாற்ற வேண்டும். அவர்கள் நாட்டின் நலன்களுக்கு எதிராக பேசுகிறார்கள். ஜம்மு அண்ட் காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி, நாம் பாகிஸ்தான் ஆக்கிரமித்த பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்கிறோம். இப்படி (சுதந்திரமான காஷ்மீர்) பேசினால் துரோகிகள். கேரள அரசு அவர்களை கடுமையாக கையாள வேண்டும் என தெரிவித்தார்.