பீகார் அரசும், முதல்வரும் ஆண்மைக் குறைவுக்கு ஆளாகியுள்ளனர்... நிதிஷ் குமாரை தாக்கிய மத்திய அமைச்சர்

 
பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மீது வெங்காயம் வீசி தாக்கிய நபர்கள்… பிரச்சார கூட்டத்தில் பரபரப்பு

பீகாரில் நடந்த கொடூர குற்றங்களை குறிப்பிட்டு, பீகார் அரசும், முதல்வரும் (நிதிஷ் குமார்) ஆண்மைக் குறைவால் பாதிக்கப்பட்டள்ளனர் என மத்திய அமைச்சர் அஸ்வினி சவுபே தெரிவித்தார்.

பீகாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் மகா கூட்டணியின் அரசாங்கம் நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களாக அந்த மாநிலத்தில் கொடூரமான குற்ற செயல்கள் அரங்கேறியது. குறிப்பாக,  பகல்பூரில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள சந்தையில் இரண்டு ஆண்கள் ஒரு பெண்ணை பயங்கரமாக தாக்கினர். அந்த பெண்ணின் கைகள், மார்பகங்கள் மற்றும் காதுகளை வெட்டியதில் அந்த பெண் இறந்து விட்டார். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கொலை

இந்நிலையில், பீகாரில் நடந்த கொடூர குற்றங்களை குறிப்பிட்டு நிதிஷ் குமாரை மத்திய அமைச்சர் அஸ்வினி சவுபே கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். பீகாரின் மைமூரில் மத்திய அமைச்சர் அஸ்வினி சவுபே செய்தியாளர்களிடம் கூறியதாவது: பீகார் அரசும், முதல்வரும் (நிதிஷ் குமார்) ஆண்மைக் குறைவுக்கு ஆளாகியுள்ளனர். நான் இதை சொல்வதற்கு காரணம், இரண்டு நாட்களாக மக்கள் கொல்லப்படுகிறார்கள். ஆனால், அரசாங்கம் முற்றிலும் உணர்ச்சியற்று உள்ளது.  

கொலை

பெண்கள் தங்கள் கைகளில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளனர். இது காட்டாட்சி இல்லை என்றால், பிறகு என்ன?. 48 மணி நேரத்தில் ஆறு உறையவைக்கும் குற்றங்கள் நடந்துள்ளன. எனவே பீகாரை உங்களால் நடத்த முடியாது என்பதை நிதிஷ் ஜியிடம் சொல்ல விரும்புகிறேன். மேலும் நீங்கள் (நிதிஷ் குமார்) ராஜினாமா செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். நிதிஷ் குமாரை ஆண்மையற்றவர் என்று மத்திய அமைச்சர் அஸ்வினி சவுபே  விமர்சனம் செய்து இருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.