தேர்தலில் எப்படி தோற்பது என்பதை காங்கிரஸிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.. அனுராக் தாக்கூர் கிண்டல்

 
காங்கிரஸ்

தேர்தலில் எப்படி தோற்பது என்பதை காங்கிரஸிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கிண்டலாக தெரிவித்தார்.


கடந்த சில தினங்களுக்கு முன் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், ராஜஸ்தான் முதல்வருமான அசோக் கெலாட் செ்யதியாளர்களிடம் பேசுகையில், ராகுல் காந்தி கட்சியின் தலைவராக வர வேண்டும். கடந்த 3 தசாப்தங்களாக காந்தி குடும்பத்தில் இருந்து யாரும் பிரதமராகவோ, அமைச்சராகவோ ஆகவில்லை. காங்கிரஸின் ஒற்றுமைக்கு காந்தி குடும்பம் முக்கியம் என்பதை புரிந்து கொள்வது குறிப்பிடத்தக்கது என்று தெரிவித்தார்.

அசோக் கெலாட்

ராகுல் காந்தி காங்கிரஸின் தலைவராக வரவேண்டும் என்று அசோக் கெலாட் கூறியிருப்பது குறித்து பா.ஜ.க.வின் பிரபல தலைவர்களில் ஒருவரும், மத்திய அமைச்சருமான அனுராக் தாக்கூரிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அனுராக் தாக்கூர் பதிலளிக்கையில்,  தேர்தலில் எப்படி தோற்பது என்பதை காங்கிரஸிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

அனுராக் தாக்கூர்

அண்மையில் நடந்து முடிந்த உத்தர பிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட் மற்றும் மணிப்பூர் ஆகிய 5 மாநில சட்டப்பேரவை தேர்தல்களில், பஞ்சாப் மாநிலத்தை தவிர்த்து மற்ற 4 மாநிலங்களிலும் பா.ஜ.க. ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது. அதேசமயம் மிகவும் பழமையான பாரம்பரியமிக்க கட்சியான காங்கிரஸோ மோசமான தோல்வியை சந்தித்தது. குறிப்பாக பஞ்சாபில் ஆட்சியை பறிகொடுத்தது.