சத்தமாக பேசுபவர்களின் கட்சி.. ஆம் ஆத்மி கட்சியை தாக்கிய தர்மேந்திர பிரதான்

 
காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் கூட எரிபொருள் மீதான வரியை உயர்த்தி உள்ளன… சோனியாவுக்கு தர்மேந்திர பிரதான் பதிலடி

ஆம் ஆத்மி கட்சியை சத்தமாக பேசுபவர்களின் கட்சி என்று பா.ஜ.க.வின் தர்மேந்திர பிரதான் கடுமையாக தாக்கினார்.

குஜராத் சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் என எதிர்பாாக்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில், பா.ஜ.க. அங்கு குஜராத் கவுரவ் யாத்திரையை நடத்தி வருகிறது. கடந்த புதன்கிழமையன்று மெஹ்சானாவில் குஜராத் கவுரவ் யாத்திரையை பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தொடங்கி வைத்தார். மத்திய அமைச்சரும், பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவருமான தர்மேந்திர பிரதான் நேற்று பா.ஜ.க.வின் குஜராத் கவுரவ் யாத்திரையில் இணைந்தார்.

ஜே.பி.நட்டா

இந்த யாத்திரையின் போது மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசுகையில் கூறியதாவது: பா.ஜ.க.வின் குஜராத் கவுரவ் யாத்திரையில் பங்கேற்க இன்று நான் உங்கள் மத்தியில் வந்துள்ளேன். இந்த முறையும் மாநில மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைப்பார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். இது சத்தமாக பேசும் மக்கள் (ஆம் ஆத்மி கட்சி) குழு. அவர்களின் டெல்லி மாதிரி என்ன?.

ஆம் ஆத்மி

அவர்களின் டெல்லி மாதிரி என்ன? அவர்கள் நேர்மையாக இருந்தால், அவர்கள் உங்களை (ஊடகங்கள்) டெல்லிக்கு அழைத்து சென்று பாாக்க வேண்டும். எந்தப் பொறுப்பையும் காட்டாதவர்களை கண்டு நான் பயப்படுகிறேன், இது அத்தகைய குழு. இவ்வாறு  அவர் தெரிவித்தார். எதிர்வரும் குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்பட ஆம் ஆத்மி தலைவர்கள்  தீவிரமாக அங்கு தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.