புலியை பற்றி தெரியாத புண்ணாக்குகள் - கி.வீரமணி கடும் தாக்கு

 
வேர்

புலி பின்வாங்குவது பாய்வதற்காகவே என்பது புலியைப் பற்றி தெரிந்தவர்களுக்கு மட்டுமே தெரியும்.  புலியைப் பற்றி தெரியாத புண்ணாக்குகளுக்கு புரியாது என்று கடுமையாக சாடினார் கி.வீரமணி.

 திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி,  திருச்சியில் திராவிடர் கழக மகளிரணி மகளிர் பாசறை கூட்டத்தில் பங்கேற்றார்.  இதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது,  திராவிட மாடல் ஆட்சி குறித்த கேள்விக்கு,  ‘’ திராவிட மாடல் ஆட்சி என்பது சுயமரியாதை , சமூக நல்லிணக்கம்,  அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி’’ என்றார்.

அவர் மேலும் அதுகுறித்து,  ‘’அனைவருக்கும் அனைத்தும்,  பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதுதான் திராவிட மாடல் . அதற்கு நேர் எதிரானது தான் ஆரிய மாடல் ‘’ என்று சொன்னார்.

வே

தொடர்ந்து  அதுகுறித்து பேசிய கி.வீரமணி,   ’’ஆண் உயர்ந்தவர் பெண் தாழ்ந்தவர் என்ற பிரிவு பேதம் இருக்கக்கூடாது என்பதைச் சொல்லி பெண்களுக்கு சம வாய்ப்பு கொடுக்கவேண்டும் என்பதற்காக சுயமரியாதை மாநாட்டில் செங்கல்பட்டில் நடத்தினார் பெரியார்.   இந்த மாநாட்டில் சொத்துரிமை ,படிப்புரிமை , உத்யோக உரிமை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார் .

பெண்களுக்கு சொத்துரிமை என்கிற அம்பேத்கரின் சட்டத்தை இந்து சட்ட மசோதாவில் சனாதனிகள் ஏற்றுக்கொள்ளவில்லை.   ஆகவே அம்பேத்கர் தனது பதவியை ராஜினாமா செய்தார் என்று சொன்னவர்,   பிரதமர் சோனியாகாந்தி தலைமையில் மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது திமுக அங்கம் வகித்த போது இந்த கூட்டணியில் சொத்துரிமைச் சட்டம் நிறைவேறியது.   பெண்களுக்கான 50 சதவிகித இட ஒதுக்கீட்டை திராவிட மாடல் ஆட்சி உள்ளாட்சித் தேர்தலில் செயல்படுத்தியது பாராட்டுக்குரியது என்றார்.

அப்போது  பாஜகவின் கடும் எதிர்ப்பினால் திமுகவின் வாங்குகிறதா என்ற கேள்விக்கு,   ’’ திமுக ஒருபோதும் பின்வாங்காது.  புலி பின்வாங்குவது பாய்வதற்காகவே என்பது புலியைப் பற்றி தெரிந்தவர்களுக்கு மட்டுமே தெரியும்.  புலியைப் பற்றி தெரியாத புண்ணாக்குகளுக்கு புரியாது’’என்று கடுமையாக சாடினார்.