ஆளுநரையே ஓட விட்டிருக்கிறார் முதலமைச்சர் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

 
Udhayanithi

பொதுவாக நம்ம முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் வெளியிடுகிற அறிவிப்பால் எதிர்க்கட்சிகளைதான் ஓடவிடுவார். ஆனால் இன்று ஆளுநரையே ஓட விட்டு இருக்கிறார் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

arulnithi with udhayanithi


சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தாடாண்டர் நகர் மைதானத்தில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை தெற்கு மாவட்ட திமுக சார்பில் 3000 அணிகள் கலந்து கொண்ட கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் பரிசுகளை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விருந்தினர்களாக இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன்,மூர்த்தி,மெயர்கள் பிரியா, மகேஷ் குமார், திமுக எம்.பிக்கள் தமிழச்சி தங்கபாண்டியன், தயாநிதிமாறன், தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் அசோக் சிகாமணி ஆகியோர் கலந்து கொண்டனர். சென்னை தெற்கு மாவட்ட அளவில் வெற்றி பெற்று முதலிடம் பிடித்த அணிக்கு இரண்டு லட்சம் ரூபாயும், இரண்டாம் இடம் பிடித்த அணிக்கு ஒரு லட்சம் ரூபாயும் பரிசு தொகை வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “பல ஆண்டுகளாக முன்பு அண்ணன் மா.சு. என்னிடம் கேட்பார். எப்போ அரசியலுக்கு வர போறீங்க என்று... நான் எப்போ மேடை ஏரினேனோ அப்பொழுதே, நான் முழு மனதாக கட்சியில் ஈடுபடுவேன் என சொல்லி விட்டேன். அன்றிலிருந்து இன்று வரை படிப்படியாக அமைச்சராக வந்துள்ளனர்.  இந்த நிகழ்ச்சியை நடத்திய அண்ணன் மா.சு. மிக சிறப்பாக நடத்தியுள்ளார். அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மாவட்டத்தில் இருந்து நிறைய மாணவர்கள் வந்து இருக்கிறீர்கள். நீங்கள் வந்தது மட்டும்  இல்லாமல் நிறைய விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும். மது, புகை போன்ற பழக்கங்களில் ஈடுபடாமல் நல்ல விளையாட்டை தேர்வு செய்து சிறப்பாக செயல் பட வேண்டும். அதற்கு நானும் நமது திராவிட மாடல் அரசும் துணை நிற்கும். 

இன்று காலை சட்டசபையில் வரலாற்றிலே காணாத ஒரு சம்பவத்தை நம் தலைவர் செய்திருக்கிறார். பொதுவாக நம் தலைவர் ஸ்டாலின் தனது பதிவுகளில், அறிவிப்புகளில் எதிர்க்கட்சிகளை தான் ஓட விடுவார், ஆனால் இன்று காலையில் ஆளுநரையே ஓட விட்டிருக்கிறார். அதுதான் நம் முதல்வர் மு.க ஸ்டாலின்” எனக் கூறினார்.