உதயநிதி மகனுக்கும் கொடிபிடிக்கும் அளவிற்கு தன்மானம் அற்ற இயக்கம் - மாஜி அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தாக்கு

 
na

திமுகவில் கருணாநிதிக்கு அடுத்து ஸ்டாலின் .   அவருக்கு அடுத்து இப்போது தலைமை இடத்திற்கு வரப்போகிறவர் உதயநிதி ஸ்டாலின் என்பதும்,   ஸ்டாலினுக்கு அடுத்து முதல்வர் வேட்பாளர் உதயநிதி தான் என்பதும் எல்லோருக்கும் தெரிந்து ஒன்றுதான்.  

உதயநிதிக்கு அடுத்து அவரது மகன் இன்பநிதி கட்சியில் வரவேண்டும் ஆட்சிக்குள் வரவேண்டும் என்பதை இப்போதே திமுகவின் மூத்த அமைச்சர்கள் சிலர் சொல்லி வருகின்றனர்.   உதயநிதி என்ன அவரது மகன் வந்தாலும் ஆதரவளிப்போம் என்று தெரிவித்திருக்கிறார் திமுகவின் மூத்த தலைவரும் அமைச்சருமான கே. என். நேரு. சேலத்தில் நடந்த திமுக கூட்டத்தில் பேசியபோது அவர் இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.

in

கலைஞர்  குடும்பம் தான் தொடர்ந்து வரவேண்டும்.  வந்தாக வேண்டும் என்றும்,  உதயநிதி மகன் இன்பநிதி முதலமைச்சர் ஆவதை பார்த்துவிட்டுத்தன்  நான் சாக வேண்டும் என்று உணர்ச்சி பூர்வமாக பேசியிருக்கிறார்  முன்னாள் எம்எல்ஏ விபி ராஜன்.

 திமுகவின் சீனியர்கள் இப்படி  வாரிசு அரசியலை ஊக்குவித்து வருவது குறித்தும்,  இன்பநதி முதலமைச்சராக வேண்டும் என்பதற்கு வரவேற்பது இருப்பது குறித்தும் கடுமையாக விமர்சித்து உள்ளார் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் நத்தம் சீனிவாசன் .

மதுரை விமான நிலையத்தில் அதிமுக முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதனிடம் இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப,   தன்மானம் இல்லாத கட்சி,  சுயமரியாதை இயக்கத்தில் இருந்து வந்தவர்கள் என்று சொல்லிக்கொண்டு சுயமரியாதையை இழந்த கட்சியாக இருக்கிறது.  சாதாரண சிறுவன் உதயநிதி மகனுக்கும் கொடிபிடிப்போம் என்று சொல்லுகிற அளவிற்கு தன்மானம் அற்ற சுயமரியாதையை இழந்த இயக்கமாக இன்றைக்கு திமுக இருக்கிறது.  அவர்கள் சுயமரியாதையின் சுடர் ஒளிகள் என்று தம்பட்டம் அடித்துக் கொள்கிறார்கள்.   மக்கள் இதைப் பார்த்து சிரித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும் கூறி இருக்கிறார்.