நாடு சர்வாதிகாரத்தை நோக்கி நகர்கிறது, அதிகார வெறி கொண்டவர்களை தூக்கி எறிய வேண்டியது அவசியம்.. உத்தவ் தாக்கரே

 
காடுகள் மற்றும்  வனவிலங்குகள் பிரியர்களுக்கு மகாராஷ்டிரா முதல்வர்  உத்தவ் தாக்கரே தரும் ஒரு  மகிழ்ச்சியான செய்தி!

நாடு சர்வாதிகாரத்தை நோக்கி நகர்கிறது. அதிகார வெறி கொண்டவர்களை தூக்கி எறிய வேண்டிய அவசியம் உள்ளது என்று பா.ஜ.க.வை உத்தவ் தாக்கரே தாக்கினார்.

உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவ சேனா பிரிவின் தலைவரும், மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வருமான உத்தவ் தாக்கரேவின் தாத்தா பிரபோதங்கர் கேசவ் சீதாராம் தாக்கரேவின் பணிகளை முன்னிலைப்படுத்த டிஜிட்டல் தளமான பிரபோதங்கர்.காம் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில், உத்தவ் தாக்கரேவுடன், அம்பேத்கரின் பேரனும், வஞசித் பகுஜன் அகாடியின் தலைவரான பிரகாஷ் அம்பேத்கர் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் உத்தவ் தாக்கரே பேசுகையில் கூறியதாவது: 

பிரகாஷ் அம்பேத்கர்

நாடு சர்வாதிகாரத்தை நோக்கி நகர்கிறது. அதிகார வெறி கொண்டவர்களை தூக்கி எறிய வேண்டிய அவசியம் உள்ளது. சுதந்திரத்தை காக்க விரும்புவோருடன் கைகோர்க்க தயாராக உள்ளேன். தற்போது ஆங்கிலேயர்களின் கொள்கையான பிரித்தாளும் கொள்கை பின்பற்றப்படுகிறது. நானும், பிரகாஷ் அம்பேத்கரும் கருத்தியல் ரீதியாக ஒரே தளத்தில் உள்ளோம், ஒன்றாக செயல்படுவோம். நாங்கள் ஒன்றாக சேரவில்லை என்றால்,எங்கள் தாத்தாக்களின் பெயரை எடுக்க எங்களுக்கு உரிமை இல்லை.

கிரண் ரிஜிஜூ

தற்காலத்தில் பசுவின் இறைச்சி கிடைத்தால் அடித்துக் கொலைகள் நடக்கின்றன. அதேசமயம் கற்பழிப்பாளர்கள் மற்றும் கொலைக்காரர்கள் விடுதலை செய்யப்பட்ட பிறகு அவர்களை பாராட்டி தேர்தலில் போட்டியிட டிக்கெட் கொடுக்கிறாாகள். இது இந்துத்துவா இல்லை. உச்ச நீதிமன்ற கொலீஜியத்தின் செயல்பாடு குறித்த மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ கருத்து அவரது தனிப்பட்ட பார்வையா அல்லது அரசாங்கத்தின் பார்வையா?. இவ்வாறு அவர் தெரிவித்தார்.