நான் முதல்வராக இருப்பதை விரும்பவில்லை என்று ஒரு சிவ சேனா எம்.எல்.ஏ. சொன்னால் கூட பதவி விலக தயார்.. உத்தவ் தாக்கரே

 
உத்தவ் தாக்கரே

நான் முதல்வராக இருப்பதை விரும்பவில்லை என ஒரு சிவ சேனா எம்.எல்.ஏ. சொன்னால் கூட பதவி விலக தயார் என மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.

மகாராஷ்டிராவில் சிவ சேனாவின் செல்வாக்கு மிக்க தலைவரும், அமைச்சருமான ஏக்நாத் ஷிண்டே மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் கிளர்ச்சியால் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு கவிழும் சூழல் நிலவுகிறது. இந்நிலையில், மகாராஷ்டிரா முதல்வரும், சிவ சேனாவின் தலைவருமான உத்தவ் தாக்கரே நேற்று பேஸ்புக் லைவ்வில் பேசியதாவது: எனது அறுவை சிகிச்சை மற்றும் உடல்நிலை காரணமாக கடந்த சில மாதங்களாக என்னால் மக்களை சந்திக்க முடியவில்லை என்பது உண்மைதான். ஆனால் இப்போது நான் மக்களை சந்திக்க ஆரம்பித்துள்ளேன். 

ஏக்நாத் ஷிண்டே

காங்கிரஸூம், தேசியவாத காங்கிரஸூம் என்னை ஆதரிக்கின்றன. ஆனால் எனது சொந்த மக்கள் (சிவ சேனா எம்.எல்.ஏ.க்கள்) என்னை முதல்வராக விரும்பவில்லை என்றால் நான் செய்ய வேண்டும். நீங்கள் (சிவ சேனா எம்.எல்.ஏ.க்கள்) சொன்னால் நான் முதல்வர் பதவியை விட்டு விலகத் தயார். இது எண்களை பற்றிய அல்ல, ஆனால் எத்தனை பேர் எனக்கு எதிராக இருக்கிறார்கள். ஒருவர் அல்லது எம்.எல்.ஏ.வோ எனக்கு எதிராக இருந்தால் விட்டு (முதல்வர் பதவியை) விடுவேன்.

சிவ சேனா

ஒரு எம்.எல்.ஏ. கூட எனக்கு எதிராக இருந்தால் அது எனக்கு மிகவும் வெட்கக்கேடானது. முதல்வர் பதவி வரும், போகும் ஆனால் மக்களின் பாசமே உண்மையான சொத்து. கடந்த 2 அண்டுகளில் மக்களிடம் அதிக பாசத்தை பெறும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. நான் ராஜினாமா செய்தால் சிவ சேனாவை சேர்ந்த இன்னொருவர் எனக்கு பிறகு முதல்வராக வந்தால் மகிழ்ச்சி அடைவேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.