கிளர்ச்சியாளர்கள் ஒரு மரத்தின் அழுகிய இலைகளை போன்றவர்கள்.. ஏக்நாத் ஷிண்டே பிரிவை தாக்கிய உத்தவ் தாக்கரே

 
காடுகள் மற்றும்  வனவிலங்குகள் பிரியர்களுக்கு மகாராஷ்டிரா முதல்வர்  உத்தவ் தாக்கரே தரும் ஒரு  மகிழ்ச்சியான செய்தி!

கிளர்ச்சியாளர்கள் ஒரு மரத்தின் அழுகிய இலைகளை போன்றவர்கள் என்று ஏக்நாத் ஷிண்டே மற்றும் அவரது ஆதரவாளர்களை உத்தவ் தாக்கரே தாக்கினார்.
 
சிவ சேனாவின் அரசியல் ஊது குழலான சாம்னா பத்திரிகைக்கு சிவ சேனா தலைவர் உத்தவ் தாக்கரே அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: இந்த கிளர்ச்சியாளர்கள் (ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணி) ஒரு மரத்தின் அழுகிய இலைகளை போன்றவர்கள், அவர்கள் உதிர்க்கப்பட வேண்டும். புதிய இலைகள் தளிர்க்கும் என்பதால் இது மரத்துக்கு நல்லது. தேர்தல் வரட்டும், மக்கள் யாரை (உத்தவ் தாக்கரே பிரிவு அல்லது ஏக்நாத் ஷிண்டே பிரிவு) தேர்வு செய்கிறார்கள் என்று பார்க்கலாம். 

கிளர்ச்சி சிவ சேனா எம்.எல்.ஏ.க்கள்

சில சிவ சேனா தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் மீது நான் அதிக நம்பிக்கை வைத்துள்ளேன் போல் தெரிகிறது. அதுதான் கிளர்ச்சிக்கு காரணம். நீண்ட காலமாக அவர்களை நம்பியது எனது தவறு. சிவ சேனாவை உடைக்க பா.ஜ.க. முயற்சிப்பது மட்டுமின்றி, மற்ற கட்சிகளின் பெரிய தலைவர்களையும் தக்க வைத்துக் கொள்ளவும் முயற்சிக்கிறது. சர்தார் படேலை காங்கிரஸிலிருந்து தங்கள் பக்கம் தக்கவைக்க அவர்கள் எப்படி முயன்றார்களோ, அதையே சிவ சேனாவை நிறுவிய எனது மறைந்த தந்தை பாலாசாகேப் தாக்கரேவையும் செய்கிறார்கள். 

பா.ஜ.க.

இவர்கள் (பா.ஜ.க.) நம்பத்தகுந்தவர்கள் இல்லை போல் தெரிகிறது. அவர்கள் அடிப்படையில் சிவ சேனா தொண்டர்களிடையே ஒரு உட்பூசலை ஏற்படுத்துகிறார்கள். மகா விகாஸ் அகாடி கூட்டணி அரசியலில் முயற்சி செய்யத்தக்கது. மக்களின் கருத்துப்படி இது தவறான நடவடிக்கையாக இருந்திருந்தால், அவர்கள் எங்கள் கூட்டணிக்கு எதிராக எழுந்திருப்பார்கள். மகா விகாஸ் அகாடியில் நாங்கள் ஒருவருக்கொருவர் மரியாதையுடன் இருந்தோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.