19-வது மாதத்தில் அமைச்சராகிறார் உதயநிதி !

 
உச்

இப்போது எம்எல்ஏவாக இருக்கும் உதயநிதி 19 ஆவது மாதத்தில் அமைச்சராக வருவார் என்று சொல்லியிருக்கிறார் அமைச்சர் தா.மோ. அன்பரசன்.

 சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியின்  எம்எல்ஏவாக இருக்கும் உதயநிதி,  திமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவு பெற்றிருக்கும் நிலையில் விரிவுபடுத்தப்பட இருக்கும் தமிழக அமைச்சரவையில் அமைச்சர் பொறுப்பை ஏற்க இருக்கிறார் என்கிற தகவல்கள் பரவி வந்தன.  ஆனால் திமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவு பெற்ற பின்னரும் கூட தமிழக அமைச்சரவை விரிவாக்கம் இன்னும் நடைபெறவில்லை.  அது தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது.

 இதனால் உதயநிதி ஸ்டாலின் எப்போது அமைச்சர் ஆகிறார்? என்ற கேள்வியும் இருந்து கொண்டே இருக்கிறது.  ஆனால் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வேண்டுமென்றே கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலரும் சொல்லி வருகின்றனர்.  ஆனால் எப்போது உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் ஆவார் என்ற கேள்வி மட்டும் இருக்கிறது.

மொ

 இந்த நிலையில் அவர் தற்போதில் இருந்து 19 ஆவது மாதத்தில் அதாவது திமுக ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் நிறைவு பெற்ற பின்னர் உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் ஆவார் என்று சூசகமாக சொல்லியிருக்கிறார் அமைச்சர் தா. மோ. அன்பரசன். 

 சென்னை சேப்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட கொய்யா தோப்பு பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் வீடுகளில் வசித்து வரும் மக்களை அந்த தொகுதியின் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலினும்,  அமைச்சர் தாமும் அன்பரசன் உள்ளிட்டோரும் சந்தித்துப் பேசினர்.  அப்போது ,  கொய்யா தோப்பில் மட்டும் 52 கோடி ரூபாய் 20 லட்சம் மதிப்பில் 358 வீடுகள் 46 குடியிருப்புகள் கட்டித் தரப்படும்.  வெறும் 18 மாதங்களில் இவை கட்டித்தரப்படும்.   

 முதலமைச்சர் ஸ்டாலின் சொன்னதைச் செய்பவர்.  முதலமைச்சர் ஸ்டாலின் சொல்லிவிட்டார் எங்கு வீடுகள் இடிக்கப் படுகின்றதோ அவர்களுக்கு அதே பகுதியில் வீடுகள் கட்டிக் கொடுக்க வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டிருக்கிறார்.  அதன்படி இப்போது காலி செய்தால் 19-வது மாதத்தில் உங்களுக்கான வீடுகளை இப்போது எம்எல்ஏவாக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் அப்போது அமைச்சராக வந்து உங்களிடம் வழங்குவார் என்று சொல்லியிருக்கிறார்.

 அன்பரசனின் இந்த பேச்சு மூலம் திமுக ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டு நிறைவடைந்த பின்னர் உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் ஆவார் என்பது உறுதியாகியிருக்கிறது.