அதை உடைத்த உதயநிதி - அங்கிருந்து சென்ற சபரீசன்
திமுக ஆட்சி அமைத்து நேற்றுடன் ஓராண்டு நிறைவு பெற்று இருக்கிறது. இதை முன்னிட்டு சட்டமன்றத்தில் நேற்று முதல்வர் மு. க. ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். திமுகவின் ஓராண்டு கால சாதனைகளை அவர் பட்டியலிட்டார்.
திமுகவின் வெற்றியின் பின்னணியில் இருக்கிறார் மு. க. ஸ்டாலின் மருமகன் சபரீசன் என்று கட்சியினரே சொல்லி வருகின்றனர். இந்த நிலையில் சட்டமன்றத்திற்கு நேற்று அவர் வருகை தந்துள்ளார்.
அவை தொடங்குவதற்கு முன்னதாகவே வந்த சபரீசனை உதயநிதி ஸ்டாலின் வரவேற்று சட்டமன்றத்திற்குள் அழைத்துச் சென்றிருக்கிறார். உதயநிதிக்கு சபரீசனுக்கும் இடையே சமீப காலமாக சுமூகமான போக்கு இல்லை என்று கட்சியினர் மத்தியில் ஒரு பேச்சு இருந்தது. அதை உடைக்கும் வகையில் நேற்று செயல்பட்டு இருக்கிறார் உதயநிதி .
சபரீசனை வாசலுக்கே வந்து வரவேற்று அழைத்துச் சென்றிருக்கிறார். அதன் பின்னர் அமைச்சர்களும் , திமுக எம்எல்ஏக்களும் சபரீசனுக்கு வணக்கம் வைத்து வரவேற்பு தெரிவித்திருக்கிறார்கள்.
முதல்வர் சிறப்புரை ஆற்றியதையும் , அவருக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் ஓராண்டு கால ஆட்சி குறித்து பாராட்டுக்கள் தெரிவித்ததையும் முதல்வருக்கு முன்பக்கம் இருந்த மாடத்தில் அமர்ந்து ரசித்துக் கொண்டிருந்த சபரீசன் , 12 மணிக்கு மேல் அங்கிருந்து புறப்பட்டு சென்றிருக்கிறார்.