உதயநிதி முதலமைச்சர் ஆகவேண்டும் - அமைச்சர் ஐபி மருமகள் அதிரடி

 
உட்

உதயநிதி ஸ்டாலின் முதலமைச்சராக வரவேண்டும் என்பது தனது விருப்பம் என்று தெரிவித்திருக்கிறார் அமைச்சர் ஐ. பெரியசாமி மருமகள் மெர்சி செந்தில்குமார். 

திமுக துணை பொதுச் செயலாளரும் கூட்டுறவுத்துறை அமைச்சருமானவர் ஐ. பெரியசாமி.  இவரின் மகன் செந்தில்குமார் பழனி தொகுதியின்  எம்எல்ஏவாக உள்ளார். திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளராகவும் இருக்கிறார்.  பெரியசாமியின் மருமகள் மெர்சி.  இவர்  தனது முகநூல் பக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் குறித்து பதிவிட்டுள்ள கருத்துக்கள் கட்சியினர் மத்தியில்  பரபரப்பாகி அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.

’’எங்க அண்ணே 27 வருடங்களுக்கு முன்பு இருந்து , பார்க்கும் பொழுதெல்லாம் அண்ணே நீங்க படம் நடிக்கனுனே , அரசியலுக்கு வரனுனேன் என்று சொல்லிகிட்டே இருப்போம் .  புன்னகையோடு கடந்து செல்வீர்கள் . ஒரு பந்தா இல்லாத மிக எளிமையாக இருக்க கூடிய மனிதர் . உங்கள் மனைவி உங்களுக்கு ஏற்றார் போல மிகவும் எளிமையானவர் கிருத்திக்கா உதயநிதி .

மெ

 உங்கள் பிள்ளைகள் ஒரு அலட்டல் இல்லாமல் வளர்கிறார்கள் . உங்கள் பெற்றோர்கள் அன்பு தங்கை நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் என நித்தமும் நினைப்பவர்கள் . திண்டுக்கல்லில் இருந்து சென்னை வரும்போதெல்லாம் அண்ணனுடன் புகைபடம் எடுக்க ஆசையாக ஓடோடி வருவோம் அன்புடன் கூப்பிடுவீர்கள் .  ஆதவன் .. உங்கள் படத்துக்கு பிறகு எங்கள் மகனுக்கு , ஆதவன் என தலைவர் பெயர் சூட்டினார் .  

ஆதவன் சென்னை வருவதே உங்களை பார்க்க தான் . கொரானா காலத்தின் போதும் தான் சேர்த்த பணத்தை உங்கள் கையிலும் , தலைவர் கையிலும் கொடுக்க வேண்டும் என அடம்பிடித்து சென்னை வந்தான் . 

நீங்கள் திண்டுக்கல் வந்தால் உங்களை பார்க்க வேண்டும் என்று அடம் பிடிப்பான் .  அவன் தந்தையிடம் கூறுவான்.    அவர் அதை கண்டுகொள்ளாத போது ,உங்களுடன் யார் வந்திருப்பார்கள் என அறிந்து அவர்களிடம் என்னை உதய் மாமாவிடம் கூட்டிட்டு போங்கள் என சொல்லான் ஆதவன் . இப்படி குழந்தைகள் முதல் பெண்கள் வரை அனைவரையும் ஈர்க்கும் சக்தி எல்லோர்க்கும் வாய்த்து விடாது அண்ணே! யாரை பற்றி யார் கூறினாலும் ,  அப்படியே ஏற்று கொள்ளாமல் உங்களுக்கு அவர்கள் மேல் என்ன பார்வை உள்ளது என தெளிவாக பிரித்து பார்க்கும் தலைவன் குணம் உங்கள் தாத்தாவை போல் உள்ளது.

கடுமையாக உழைக்கிறீர்கள்.   உங்களுக்கு இந்த பதவியை விட மிக பெரிய பதவி வந்தே தீரும் ! நீங்கள் இந்த நாட்டின் மந்திரியாக வேண்டும் !  வருங்காலத்தில் முதலமைச்சர் ஆக வேண்டும் ! என்பதெல்லாம் எங்கள் கனவு ,லட்சியம் ,ஆசை !  இவையெல்லாம் ஒரு நாள் கண்டிப்பாக நடந்தேயாகும்! உங்கள் உழைப்புக்கு எல்லாம் வல்ல இறைவன் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் உங்கள் தொழி்ழையும் ஆசிர்வதிப்பாராக ! உங்கள் தங்கைகள் நாங்கள் எல்லோரும் என்பதில் எங்களுக்கு எப்போதுமே பெருமை தான்’’ என்று பதிவிட்டுள்ளார்.