உதயநிதி சேனல் வாலிபர் மர்ம மரணம் -தோலுரித்த எடப்பாடி பழனிச்சாமி

 
u

பொம்மை முதல்வர் ஸ்டாலின் மக்கள் தொலைபேசியில் தன்னை பாராட்டுவதாக தனக்குத்தானே சுய பெருமை பேசுகிறார்.  இவர் திருவாய் மலர்ந்த பின்னர் ஓரிரு வாரங்களில் அரங்கேறிய சில முக்கிய சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை இங்கே தோலுரித்துக் காட்டுகிறேன் என்று  தெரிவித்திருக்கிறார் முன்னாள் முதல்வரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி.  

 இது குறித்த அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,   பிரபல நடிகர் நடத்தி வந்த பிளாக் ஷீப் என்ற youtube சேனலை ஆளுங்கட்சியின் வாரிசு ஒருவர் வாங்கியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.  டிசம்பர் மாதம் எட்டாம் தேதி அந்த சேனலில் சர்வர் அறையில் விஜயவாடாவை சேர்ந்த பாலாஜி என்கிற ஊழியர் மர்மமான முறையிலே இறந்து கிடந்ததாகவும் காவல்துறை இதை மர்ம மரணம் என்று வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

s

இந்த சம்பவம் குறித்து கடந்த 12ம் தேதி அன்று அரசியல் விமர்சகம் சவுக்கு சங்கர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,  ‘’நடிகர் சிவகார்த்திகேயன் அவர்களுக்கு சொந்தமாக இருந்த சேனல் சில மாதங்களுக்கு முன்னால் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் அந்த சேனலை வாங்கி விட்டதாக ஒரு பேச்சு அடிபட்டது.  அந்த பிளாக் ஷீப் சேனல் வந்து இப்போது உதயநிதி அவர்களின் மேனேஜ்மென்ட் தான் நடந்துட்டு இருக்கு.  இந்த பிளாக் ஷீப் சேனல் வந்து விரைவில் சாட்டிலைட் சேனலாக மாறப் போகிறது.  கதிர் நெட்வொர்க் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் சென்னை அறிவாலயத்தை முகவரியாக கொண்டு ஜூலை 2022ல் ஒரு புதிய நிறுவனம் பதிவு செய்யப்பட்டுள்ளது.  அந்த நிறுவனத்தின் பெயரில்தான் சித்திரம் டிவி என்ற பெயரில் ஒரு புதிய சேட்டிலைட் சேனலை  விரைவில் தொடங்க இருக்கிறார்கள்.  இரண்டு பேர் இயக்குனர்கள் ஒருவர் வந்து இந்த பிரபலமான ஆர்ஜே விக்னேஷ் என்று ஒரு நிகழ்ச்சி நடத்தக்கூடியவர் பார்த்திருப்பீங்க.  இன்னொருவர் துர்கா ஸ்டாலின் அவர்களின் உறவினர் கலைஞர் டிவி கார்த்திக் என்று அழைக்கப்படக்கூடிய கார்த்தி சன் ஆப் சண்முகசுந்தரம். 

  கடந்த டிசம்பர் 8 அன்று இரவு இந்த பிளாக் ஷீப் சேட்டிலைட் சேனலோட சர்வர் ரூம்ல பாலாஜி என்ற டெக்னீசியன் உயிரிழந்து கிடந்திருக்கிறார்.   ஒரு டெக்னிக்கல் பர்சன் நிறுவனத்தோட சர்வர் ரூம்ல பாலாஜி என்பவர் அந்த சர்வர் ரூமில் இறந்து போகிறார்.  அவர் இறந்து போனது மர்மம், கொலை என்று எல்லாம் எந்த குற்றச்சாட்டையும் நான் சுமத்த விரும்பவில்லை. ஆனால் அவர் சர்வ ரூம்ல  எட்டாம் தேதி இரவு இறந்து போனது என்பது உண்மை.  அவர் இறந்து போனதை பார்த்த உடனே அவரை கோடம்பாக்கத்தில் உள்ள  மெட்வே ஹாஸ்பிடல் என்ற மருத்துவமனைக்கு அந்த பிளாக் ஷீப் நிறுவனத்தில் இருப்பவர்கள் அவரை அழைத்துச் செல்கின்றனர்.   இறந்துவிட்டார் என்று சொல்கின்றனர்.   அதன்பேரில் ஒரு எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்பட்டு இறந்து போன பாலாஜியின் உடல் ராயப்பேட்டை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

uu

மர்மமான மரணம் சந்தேகத்திற்குரிய மரணம் என்று காவல்துறையை வழக்கு பதிவு செய்திருக்கிறது . அப்படித்தான் புகார் பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்று மருத்துவர்கள் சொல்றாங்க.  காவல்துறை அதிகாரிகள் என்னிடம் தெரிவிப்பது வந்து அவருக்கு மதுப்பழக்கம் இருந்துச்சு மனைவி பிரிந்து வாழ்கிறார் அவர் அலுவலகத்தில் அடிக்கடி தங்குவார் . அதனால் இயல்பாதான் இறந்து போயிருக்காரு . அப்படின்னு சொல்றாங்க . நான் அதை நம்புறேன் .

ஆனால் அவர் இறந்ததாக சொல்லப்படுகிற இடத்திற்கு காவல்துறையினர் ஏன் இன்னும் செல்லவில்லை?  எனக்கு அந்த அலுவலகத்தில் பணியாற்றக் கூடியவர்கள் தெரிவிக்கிறார்கள்.. எதற்காக சிசிடிவி காட்சிகளை அழிக்க வேண்டும்?   இன்றைக்கு வரைக்கும் காவல்துறையினர் அங்கே செல்லவில்லை என்பதால் சென்னை மாநகர காவல் துறை ஆணையர் சங்கர் ஜிவால் அந்த நிறுவனத்தில் எது நடந்தாலும் ஒருவர் மர்மமான முறையில் இறந்து போயிருந்தாலும் கூட காவல்துறையினரின் முறையான விசாரணை நடத்த விடாமல் இருக்கிறாரா?   பாலாஜி குடும்பத்தை சேர்ந்தவர்களை தொடர்பு கொள்ள முயற்சி செய்தால் அவர்கள் யாரும் தொடர்பு கொள்ள முடியவில்லை. பாலாஜியின் உடல் அவரது சொந்த ஊர் விஜயவாடாவுக்கு எடுத்து செல்லப்பட்டு விட்டது என்பது மட்டும் தெரியவந்தது’’என்று கூறியிருந்தார்.

இந்தநிலையில் எடப்பாடி பழனிச்சாமி தனது குற்றச்சாட்டில் பாலாஜியின் மரணத்தையும் குறிப்பிட்டிருக்கிறார்.