ராஜினாமா செய்த அமைச்சர்.. டெல்லிக்கு புகார் கொடுக்க சென்ற மற்றொரு அமைச்சர்.. சிக்கலில் யோகி ஆதித்யநாத்

 
யோகி

உத்தர பிரதேசத்தில் அமைச்சர் ஒருவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்,  மற்றொரு அமைச்சர் டெல்லி பா.ஜ.க. தலைமையிடம் முதல்வர் குறித்து புகார் தெரிவித்துள்ளார் இதனால் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தான் தலித் என்பதால் ஒரங்கட்டப்பட்டதாக கூறி ஒரு அமைச்சர் தினேஷ் காதிக் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார், மற்றொரு அமைச்சர் நிதின் பிரசாதா,  முதல்வர் மீது அதிருப்தியில் இருக்கிறார் மற்றும் டெல்லி சென்று தலைமையை சந்தித்து பேசுகிறார். இது முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

தினேஷ் காதிக்

உத்தர பிரதேச நீர்வளத்துறை அமைச்சர் தினேஷ் காதிக், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு அனுப்பிய தனது ராஜினாமா கடிதத்தில், எனக்கு 100 நாட்களாக எந்த வேலையும் ஒதுக்கப்படவில்லை. துறை ரீதியான இடமாற்றங்களில் முறைகேடுகள் நடந்துள்ளது. நான் புண்பட்டதால் ராஜினாமா செய்கிறேன். நான் தலித் என்பதால் எனக்கு எந்த முக்கியத்துவமும் வழங்கப்படவில்லை. அமைச்சராக எனக்கு அதிகாரம் இல்லை. நான் மாநில அமைச்சராக பணியாற்றுவது தலித் சமூகத்துக்கு வீணானது, என்னை எந்த கூட்டத்திற்கும் அழைக்கவில்லை. எனது அமைச்சகம் பற்றி எதுவும் கூறவில்லை. இது தலித் சமூகத்தை அவமதிக்கும் செயலாகும் என்று தெரிவித்துள்ளார்.

குறுகிய மனப்பான்மை உள்ளவர்கள், சிறியவர்களாகவே இருப்பார்கள்.. குப்பை என்ற காங்கிரசுக்கு பதிலடி கொடுத்த ஜிதின் பிரசாதா

காங்கிரஸிலிருந்து பா.ஜ.க.வுக்கு வந்த ஜிதின் பிரசாதாவுக்கு பொதுப்பணித்துறை வழங்கப்பட்டது. ஆனால் அந்த துறையில் ஊழல் நிலவுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து முதல்வர் அலுவலகம் விசாரணைக்கு உத்தரவிட்டது, அதில் பல அதிகாரிகள் இடமாற்றத்துக்காக லஞ்சம் வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல். இதனையடுத்து துறைசார் இடமாற்றங்களில் கடுமையான முறைகேடுகள் செய்ததாக 5 மூத்த பி.டபுள்யூ.டி. அதிகாரிகளை உத்தர பிரதேச அரசாங்கம் இடைநீக்கம் செய்தது. அதில் அமைச்சர் ஜிதின் பிரசாதாவின் சிறப்பு பணி அதிகாரியான அனில் குமார் பாண்டேவும் ஒருவர். தனது குழுவில் உள்ள அதிகாரியை யோகி ஆதித்யநாத் இடைநீக்கம் செய்ததால் அவர் மீது ஜிதின் பிரசாதா கடும் கோபத்தில் உள்ளார். மேலும், டெல்லி  பா.ஜ.க. தலைமையிடம் ஜிதின் பிரசாதா தனது அதிருப்தியை தெரிவித்ததாக கூறப்படுகிறது.