ஆடியோ விவகாரம்- பிரச்னையை பேசி தீர்த்துக் கொண்டோம்: திருச்சி சூர்யா சிவா
ஆடியோ விவகாரம் தொடர்பாக திருப்பூர் பாஜக அலுவலகத்தில் விசாரணை நடைபெற்றது. ஓபிசி பிரிவு மாநில துணைத்தலைவர் திருச்சி சூர்யா சிவா மற்றும் பாஜக சிறுபான்மை பிரிவு மாநிலத்தலைவர் டெய்சி ஆகியோரிடம் பாஜக ஒழுங்கு நடவடிக்கை குழு முன்னிலையில் விசாரணை நடைபெற்றது.
விசாரணைக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய ஓபிசி பிரிவு மாநில துணைத்தலைவர் திருச்சி சூர்யா சிவா, “பாஜக சித்தாந்ததால் ஈடுபட்டு வந்துள்ளோம், எதிர்கட்சிகளுக்கு அவல் கிடைத்ததுபோல பரப்பி வருகின்றனர். எங்களுக்கிடையில் பரஸ்பரம் பேசி முடித்துக்கொண்டோம். சுமூகமாக முடித்துக்கொண்டோம் , இருவரும் ஆடியோவை வெளியிடவில்லை, எழுத்துப்பூர்வமாக அறிக்கை அளித்துள்ளேண். கண்பட்டு விட்டதுபோல நடந்துவிட்டது.
அண்ணாமலைக்கு களங்கம் ஏற்படுத்தவே ஆடியோவை பரப்பி வருகின்றனர். இதனை ஊடகங்கள் இதனை பெரிதுபடுத்த வேண்டாம்
தவறு எனும் பட்சத்தில் கட்சி தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவேன், குடும்பரீதியிலான நட்புறவுடன்தான் இருக்கிறோம். சின்ன அசம்பாவிதம்தான். ஆனால் இனி இதுபோல நடக்காது என உறுதியளித்தனர். திமுகவின் சைதை சாதீக் போண்றவர்கள் பேசியதற்கு கட்சி ரீதியாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது . ஆனால் பாஜகவில் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. கட்சி தலைமை நடவடிக்கை எடுத்தாலும் கட்டுப்படுவோம்” எனக் கூறினார்.