எடப்பாடிக்கு விடை கொடுக்க வேண்டிய நேரம் - ஓபி. ரவீந்திரநாத் கடும் கோபம்

 
ஒப்

கொள்கை முடிவு எடுத்ததினால் அமைதியாக இருக்கிறேன் என்று விப ஜெயபிரதீப் எச்சரித்திருந்த நிலையில், எடப்பாடிக்கு விடை கொடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று  கடும் கோபத்தை காட்டியிருக்கிறார் ஓபி ரவீந்திரநாத் எம்.பி.

ஓபிஎஸ் மகன்கள் ரவீந்திரநாத், ஜெயபிரதீப் உள்பட அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் அணியினர் 18 பேர் கூண்டோடு நீக்கப்பட்டனர்.  வெல்லமண்டி நடராஜன், சையது கான், எஸ்.ஏ.அசோகன், ஓம் சக்தி சேகர் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். மேலும் கட்சியினர் யாரும் நீக்கப்பட்டவர்களுடன் தொடர்பு வைத்துக்கொள்ள கூடாது  என்று அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார்.

ஓ

வழக்கம் போல் ஏட்டிக்குப் போட்டியாக,   கட்சியின் கொள்கை குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான செயல்பட்டதாலும், கட்சியின் கண்ணியத்துக்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்திலும், எடப்பாடி பழனிசாமி,  கே.பி.முனிசாமி, திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, ஜக்கையன், ஆர்.பி உதயக்குமார், செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன், ஓ.எஸ்.மணியன்,  வளர்மதி, வேலுமணி, ஜெயக்குமார், கோகுல இந்திரா, ஆதிராஜாராம், தி.நகர் சத்யா,விருகை ரவி, அசோக், சி.வி.சண்முகம், கந்தன், இளங்கோவன், செல்லூர் ராஜூ, , ராஜன் செல்லப்பா ஆகிய 22 பேர் அதிமுகவில் இருந்து நீக்கப்படுவதாக  ஓபிஎஸ் அறிவித்தார். மேற்கண்ட அனைவரும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுவதாகவும், கட்சி உறுப்பினர்கள் யாரும் இவர்களுடன் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம் என கேட்டுக்கொள்வதாக ஓபிஎஸ் கூறியிருந்தார்.

தனது மகன்கள் நீக்கப்பட்டதற்கு, ’’கட்சி சட்டவிதிகளின் படி எடப்பாடி பழனிசாமியின் எந்த அறிவிப்பும் செல்லாது. உண்மையான அதிமுக நாங்கள்தான்.   எங்களை அவர்கள் நீக்கியது செல்லாது. ஏதேட்சையான எடப்பாடி பழனிசாமி போக்கு எந்த வகையிலும் செல்லாது. அதிமுகவிலிருந்து ரவீந்தரநாத் எம்பியை நீக்கியது சர்வாதிகாரத்தின் உச்சநிலை”என கண்டனம் தெரிவித்திருந்தார்.

ஜ்

இதுகுறித்து ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப்,  “அரசியல் களத்தில் மனசாட்சியின்படி உண்மையாகவும் யாருக்கும் எந்த தீங்கும் செய்யாமலும் நேர்மையாக மக்கள் பணி செய்து , யாருடைய நலனுக்காகவும் முன்னேற்றத்திற்காகவும் சுதந்திரத்திற்காகவும் உடல் வருத்தி போராடுகிறோமோ , அவர்களாலேயே கேலியும் கிண்டலும் பொய்களும் விமர்சனங்களும் சூழ்ச்சிகளும் துரோகங்களும் எதிர்கொள்ளும் போது , என்னதான் அரசியல் பயணத்தில் மனம் இரும்பாக இருந்தாலும் சற்று வலிக்கத்தான் செய்கிறது .

2001 - ஆம் ஆண்டு கழக உறுப்பினராக சேர்ந்த பிறகு கழக சொந்தங்கள் யாரையும் பொதுவெளியில் விமர்சிக்க கூடாது என்று கொள்கை முடிவு எடுத்ததினால் அமைதியாக இருக்கிறேன் . எந்தவித சோதனைகளை சந்தித்தாலும் புரட்சித்தலைவர் , புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆசியோடு , காலத்தால் நல்ல தீர்ப்பு வரும் வரை கழக சொந்தங்கள் உணரும் வரை  இறைவனின் துணையோடு தர்மத்தின் பாதையிலேயே பயணிப்போம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஜ்

ஓபி.ரவீந்திரநாத் எம்.பி.,  ‘’என் அங்கீகாரம்.. நாடாளுமன்றத்தில் இரட்டை இலையை அங்கீகரித்த ஒரே ஒரு வெற்றி . அது உண்மை தொண்டர்களின் உழைப்பால் கிடைத்த வெற்றி.  கழக நிரந்தர பொதுச் செயலாளர் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் எனக்கு கொடுத்த வரம்.  அதை நீக்கவும் ஒதுக்கவும் எடுக்கவும் கோமாளி கூடாரத்திற்கு இல்லை அதிகாரம்.    கொள்ளை புற வழி வந்தவர்களுக்கு கொள்கை விலகி சென்றது வெகு தூரம்.   பதவி கொடுத்தவர்களுக்கு பாதக ம் விளைவித்த இடையில் வந்த ’எடை’யில்லா ’பாடி’க்கு விடை கொடுக்க வேண்டிய வந்து விட்டது நேரம் ஒன்றரை கோடி உண்மை தொண்டர்களே ஒன்றிணைவோம் ஒற்றுமையோடு வெற்றி பெறுவோம்’’ என்று தெரிவித்திருக்கிறார்