மூன்று அமைச்சர்கள் அப்செட்! அதிமுக பக்கம் சாய்கிறதா மதிமுக?
![4r](https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/4d2a5d2e34991adee181d18fcf1ea7c5.jpg)
தொடர்ச்சியான செயல்பாடுகளால் அதிமுக பக்கம் சாய்கிறதா மதிமுக என்ற சலசலப்பு எழுந்திருக்கிறது.
சட்டமன்றத் தேர்தலில் ராஜூ கோவில்பட்டி தொகுதியில் போட்டியிட்டதால் அவர் வெற்றி பெறுவதற்காக அந்த தொகுதியில் மதிமுக போட்டியிடாமல் சாத்தூர் தொகுதியில் போட்டியிட்டது என்ற பேச்சு இருந்தது. அதேபோல் உள்ளாட்சித் தேர்தலில் அந்த தொகுதியில் அதிமுகவுடன் மதிமுக மறைமுக கூட்டணி வைத்ததாகவும் சலசலப்பு எழுந்தது. இந்த நிலையில் தொடர் ஜோதி ஓட்டம் விவகாரத்திலும் அதிமுகவுக்கு சாதகமாக இருக்கிறது மதிமுக .
தூத்துக்குடி மாவட்டத்தில் பாஞ்சாலங்குறிச்சி வீர சக்கதேவி கோவிலின் 66 வது ஆண்டு திருவிழாவை முன்னிட்டு வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு அறக்கட்டளை இளைஞர் அணி, மாமன்னர் திருமலை நாயக்கர் இளைஞர் பேரவை சார்பில் தொடர் ஜோதி ஓட்டம் நடைபெற்றப்படுகிறது . இந்த நிகழ்ச்சியை அதிமுகவின் முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி எம்எல்ஏவுமான ராஜு துவக்கி வைத்தார் . மதிமுகவின் தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ ஜோதியை பெற்றுக்கொண்டார்.
திமுக கூட்டணியில் மதிமுக அங்கம் வைக்கிறது. திமுகவில் நாயுடு சமூகத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் மூன்று பேர் உள்ளனர். மேலும் சில எம்எல்ஏக்களும் உள்ளனர். அப்படி இருக்கும்போது அவர்களில் ஒருவரை கூட அழைக்காமல் அதிமுகவின் மாஜியை அழைத்து விழாவை நடத்தியது திமுகவினரை அதிருப்தி அடைய வைத்திருக்கிறது.
சட்டசபை தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் ஆகியவற்றில் அதிமுகவுக்கு சாதகமாக நடந்து கொண்ட மதிமுக, தற்போது தொடர்ஜோதி ஓட்டத்திலும் அதிமுகவுக்கு சாதகமாக நடந்து கொண்டிருப்பதால் அதிமுக பக்கம் சாய்கிறதா மதிமுக? என்று திமுகவில் சலசலப்பு எழுந்திருக்கிறது.