கருணாநிதி வேனை கொளுத்தியவன்கள் இன்று திமுக அரசின் மந்திரிகள் -திமுக மூத்த நிர்வாகியின் கணவர் பரபரப்பு

 
க

 திமுகவின் முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக துணை பொதுச்செயலாளருமானவர் சுப்புலட்சுமி.  அவரது கணவர் ஜெகதீசன்.   இவர் திமுகவின் முன்னாள் தலைவர் கருணாநிதியின் தீவிர விசுவாசி.  கட்சியின் உள்ள எந்த நிர்வாகியையும் கடுமையாக விமர்சிப்பவர்.  இப்போதும் அதை கடுமையாகச் செய்திருக்கிறார்.  இவர் திமுகவின் தற்போதைய நிலையை குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார்.  இது திமுகவினரிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.  திமுக நிர்வாகிகள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

ஜ்

விருதுநகரில் திமுக முப்பெரும் விழா நடைபெறுகிறது முதல்வர் மு. க. ஸ்டாலின் உட்பட அனைத்து திமுக தலைவர்களும் இதில் பங்கே இருக்கிறார்கள்.  திமுக துணை பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி இந்த விழாவில் பங்கேற்கிறார்.    இந்த நிலையில் அவரின் கணவர் திமுகவில் பல வெடிகளை கொளுத்தி போட்டு இருக்கிறார்.

மாமனிதன் வைகோ என்கிற ஆவணப்படத்தை கடந்த 11ஆம் தேதி அன்று சென்னையில் முதல்வர் ஸ்டாலின் வெளியீட்டு அதில் வைகோவை புகழ்ந்து பேசினார்.  இதை பார்த்த ஜெகதீசன் கடுப்பாகிவிட்டார்.   உடனே அவர் தனது முகநூல் பக்கத்தில்,    வெட்கமில்லை மானமில்லை நடத்துராஜா.. நேரம் எப்படி மாறி இருக்குது பாரு ராஜா.. துரோகத்தை எதிர்த்து அன்று கருணாநிதிக்கு ஆதரவாக நின்றவர்கள் நிலை என்ன ராஜா.. வெட்கம் மானம் ரோஷம் மரியாதை சூடு சொரணை எனக்குள்ளது என்ன செய்ய உடன்பிறப்பே.. என்று கூறியிருக்கிறார்.    இதற்கு அடுத்த பதிவில் 2016ல் நால்வர் அணிக்கு தலைமை ஏற்ற வைகோ பேசிய/ ஏசிய உரைகள் ஞாபகம் வரவில்லையா?  அதை உணராமல் விமர்சிக்கும் என்னை திட்ட வெட்கமாக இல்லையா உமக்கு என்று தெரிவித்திருக்கிறார் .

தொடர்ந்து அடுத்தடுத்த பதிவுகளில் இன்னும் காரசாரமாகவே திமுகவை கடுமையாக விமர்சித்து உள்ளார்.

ஜ

1993  பழநி நாடாளுமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு இராணிப் பேட்டை சட்டமன்ற இடைத்தேர்தலுக்குச் சென்ற தமிழினத்தலைவர் கலைஞர் அவர்களின் வேனை தீயிட்டுக்கொளுத்தினர் .  வண்டியிலிருந்த தலைவரின் உடை உள்ளிட்ட உடமைகள் தீக்கிறையாயின . தீயிடத் திட்டம் வகுத்துத்தந்தவன் ஜெ. அரசில் அன்று மந்திரி . தீயிட்டவன் எம்.எல்.ஏ .  இன்று அவன்கள் இருவரும் திமுக அரசின் மந்திரிகள் . முதல்வருக்கு கூட இருந்து குழி தோண்டும் குணாளன்கள் !! பூரித்துப் பாராட்டுபவர் இன்றைய முதல் மந்திரி . காலங்கள் மாறலாம் . அவர்கள் உடன்பிறந்த துரோகச்சிந்தனைகளும், இந்தத் துரோகிகளும் மாறமாட்டார்கள் என்பது முதல்வருக்குத் தெரியாதா ? அவர்களால் கட்சிக்கு ஆதாயமா ? இல்லை அவர்களுக்கா ? குடும்பத்துக்கா ? என்று கேட்கிறார்.

சு

கலைஞரின் குரல் ! கேட்கிறதா? என்ற தலைப்பில் துரோகிகளைப் பார்த்து துடிக்கிறது தம்பி என் நெஞ்சு !  உழைத்து ஓடாய்போன தொண்டர்களைக் கண்டு கண்ணீர் பெருகுகிறதே என் உடன்பிறப்பே ! என்னைக்காட்டிக் கொடுத்து அழிக்க நினைத்தவர்கள் ஆட்சியின் அதிகாரத்தில் ! என்னைக் கவசம்போல் காத்து நின்று சிறை ஏகி வளமிழந்தோர் வறுமையின் பிடியில் ! நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலையற்ற என் "மக்களைக்" காணும்போது !! என்று பதிவிட்டிருக்கிறார்.

அழிவின் விளிம்பை நோக்கி  என்ற தலைப்பில்,  ஜெயலலிதா வீட்டு திருமணத்தைப் போல  மதுரையில் நடந்த அமைச்சர் மூர்த்தி வீட்டுத் திருமணம்! மதுரையில் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி அவர்கள் வீட்டு திருமணம் பலபத்து கோடிகள் செலவில் நடைபெற்றதை தொலைக்காட்சிகள் காட்டியது.      

க 
             
 திராவிட மாடல் ஆட்சி என்று சொன்னால் தந்தை பெரியார் காட்டிய வழியில் சமூக சிந்தனை கொண்ட மாற்றத்தை உருவாக்குகின்ற நிகழ்ச்சிகளை தான் நடத்த வேண்டும். பல்லாயிரம் ஆடுகளை வெட்டி, கோழிகளை அடித்து போட்டு பணம் எண்ணும்  மெஷின்களை வரிசையாக வைத்து மொய் வசூல் செய்து நடத்துகிற திருமணம் எல்லாம் திராவிட மாடலா..?
 
இந்தத் திருமணத்தில்  முதல்வர்  கலந்து கொண்டு இது 'பிரம்மாண்டம்' என்று புகழ்வதும் பகுத்தறிவுக்கு ஒவ்வாதது என்பதனை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.  இதுதான் பெரியார் ,அண்ணா போன்ற ஆசான்களிடம் முதல்வர் அவர்கள் கற்றுக் கொண்ட பாடமா? என்ற கேள்வி எழுகிறது.
      
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இது போன்ற  பிரம்மாண்ட செலவுகளை அனுமதிப்பது கட்டாயம் ஊழலுக்கு வழிவகுக்கும் என்பதை உணராமல் இருப்பது வேதனையாகும்.  1996- ஆம் ஆண்டு மக்கள் ஜெயலலிதாவின் திருமண ஆடம்பரத்தின் மீதும் கோபம் கொண்டு தான் ஜெயலலிதாவையே தூக்கி வீசினார்கள்.
        
  மதுரையில் நடைபெற்ற திருமணம் எந்த விதத்திலும் ஜெயலலிதா நடத்திய ஆடம்பர திருமணத்திற்கு குறைந்தது அல்ல என்பதனை அங்கு நடந்த நிகழ்வுகள் காட்டுகின்றது.  இது திராவிட மாடல் ஆட்சி என்று சொல்லிக் கொள்ளுகிற இந்த ஆட்சிக்கு பொருத்தமானதும் அல்ல! இந்தப் பகட்டு மக்களுக்கானதும் அல்ல!  இதனை முதலமைச்சர் கூர்ந்து கவனிக்க வேண்டும் என்று விரும்புகிறோம் .  இல்லையென்றால் காலம் வேறு விதமாக பதில் சொல்லும்! என்று குறிப்பிட்டிருக்கிறார்.

டே

திமுக துணைப்பொதுச்செயலாளரின் கணவர்  இப்படி வெளிப்படையாக விமர்சித்து இருப்பதால் திமுகவினரிடையே அதிர்ச்சி ஏற்பட்டு இருந்தாலும்,  திமுக ஜெயராமன் உள்பட பலரும் அவரின் கருத்துக்களுக்கு ஆதரவு தெரிவித்திருக்கின்றனர்.

துணைப் பொதுச்செயலாளரின் கணவர் பதிவு செய்ததில் நளினம் இல்லாமல் இருக்கலாம்,மென்மை தன்மை இல்லாமல் இருக்கலாம். தலைமையில் முக்கிய பொறுப்பில் உள்ளவர் கணவருக்கு சில பொறுப்புகள் இருக்கிறது அதை மீறக் கூடாது என்ற விதி இருக்கலாம்.  ஆனால் அவர் சொல்லிய கருத்தில் உண்மை இல்லாமல் இல்லை.

வைகோ திமுகவை விட்டு பிரிந்த போது  இந்த இயக்கத்தை காக்க போராடிய தலைவர்கள் பலர்,தொண்டர்கள் கோடியில், தலைவர் கலைஞர் சிறிது மெத்தனமாக இருந்திருந்தால் கட்சியின் சின்னமே முடக்கப்பட்டிருக்கலாம்.  அந்த வைகோ போனபோது அவரோடு சென்றவர்கள் இன்று திமுகவில் பல உயரிய பொறுப்புகளில் அதை உயிருள்ள திமுக காரனால் கண்டிப்பாக பொறுத்துக் கொள்ள முடியாது.

2016 ல் திமுகவை ஒழிக்க ஐவர் அணியை உருவாக்கி வாக்குகளை பிரித்து வெல்ல வேண்டிய திமுகவை வீழ்த்த உதவிய வைகோவோடு போன கணேசமூர்த்திக்கு ஈரோடு பாராளுமன்றத்தில் நிற்கு வைத்து எம்பி சீட்டை வாங்கி கொடுத்ததால்  ஈரோட்டுகாரனுக்கு கோபம் வரத்தான் செய்யும். வைகோ விஷயத்தில் அவர் கருத்துக்கள் உண்மை என்றாலும்  சொல்லும் முறை தவறு. அதோடு அமைச்சர்கள் மீது சுமத்தும் குற்றச்சாட்டு மாபெரும் தவறு என்கிறார்கள்.