இந்த 2 பேருக்குத்தான் அந்த 2 சீட்! விடாப்பிடியாக நிற்கும் எடப்பாடி!

 
ad

2 சீட்டுக்கு 50 பேர் அடிச்சிக்கிட்டா என்ன பண்ணுறது? என்று எடப்பாடியை திணறடித்திருக்கிறார்கள். ஆனாலும், இந்த 2 பேருக்குத்தான் அந்த 2 சீட் என்பதில் விடாப்பிடியாக இருக்கிறாராம் எடப்பாடி.

 தமிழ்நாடு உட்பட 15 மாநிலங்களுக்கான காலியாகும் 57 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் அடுத்த மாதம் நடைபெற இருக்கிறது . தமிழகத்தில் ஆறு மாநிலங்களவை உறுப்பினர் பதவிகள் காலியாக இருக்கிறது.  இந்த ஆறு இடங்களில் திமுக மூன்று இடங்களிலும் ,அதிமுக இரண்டு இடங்களிலும் ,காங்கிரஸ் ஒரு இடத்தில் போட்டியிடுகின்றன. இதில்,  திமுக தனது மூன்று வேட்பாளர்களை உடனடியாக அறிவித்து விட்டது .  காங்கிரஸில் ஒரு சீட் இருப்பதால் அது முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரத்திற்கா,  தற்போதைய தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே. எஸ். அழகிரிக்கா என்ற இழுபறியில் இருக்கிறது . அதிமுகவில் இரண்டு சீட் இருப்பதால் அந்த இரண்டு சீட் யாருக்கு என்பதில் தான் பெரும் போட்டி நிலவுகிறது.  பெரும்பாலும் மாஜிக்கலே இந்த இரண்டு சீட்க்காக அடித்துக் கொண்டிருக்கிறார்கள் .

o

முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார்,  சி.வி. சண்முகம்,  கோகுல இந்திரா,  வளர்மதி , செம்மலை என்று முட்டி மோதிக் கொண்டிருக்க,  இதில் இடையில் புகுந்து அந்த சீட்க்காக மோதி இருக்கிறார் நடிகை விந்தியா.    

அதிமுகவில் இருப்பது ரெண்டு சீட் தான் ஆனால் 50-க்கும் மேற்பட்டோர் விருப்பமனு தாக்கல் செய்துள்ளனர்.  இந்த 50 பேருமே கட்சியின் முக்கி மாணவர்கள் என்பதால் தான் உடனடியாக வேட்பாளர்களை தேர்வு செய்வதில் பெரும் இழுபறி நீடித்திருக்கிறது.   இது குறித்து ஆலோசித்து முடிவெடுக்க நேற்று அதிமுக தலைமைச் செயலகத்தில் கூடியிருக்கிறார்கள். 

 முன்னதாக ஓபிஎஸ் -இன் ஆதரவாளர்கள் அவரது வீட்டில் படையெடுத்து சென்றிருக்கிறார்கள்.  அதேபோல் இபிஎஸ் ஆதரவாளர்கள் அவரது வீட்டில் அந்த எம்பி சீட் கேட்டு படை எடுத்து சென்றிருக்கிறார்கள்.  இந்த நிலையில் நேற்று நடந்த கூட்டத்தில் போட்டி பலமாக இருப்பதால் ஓபிஎஸ் எதுவுமே பேசாமல் அமைதியாக இருந்திருக்கிறார்.  இபிஎஸ் தான் எல்லாவற்றையும் சமாளித்து இருக்கிறார்.  

c

 அந்த ரெண்டு சீட்’டையும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.வி. சண்முகம்,  ஜெயக்குமாருக்கு கொடுக்க இருக்கிறோம் என்று இபிஎஸ் பேசி இருக்கிறார்.  அதற்கு கோகுல இந்திராவும் , ஜேசிடி பிரபாகரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள்.  

மாஜிக்களுக்குத்தான் கொடுக்க வேண்டும் என்று ஏன் நினைக்கிறீர்கள்?  அப்படி மாஜிக்கள் ரெண்டு பேரை இப்போது நீங்கள் அறிவித்து விட்டாலும் அடுத்து சட்டமன்றத் தேர்தல் வரும் போது ராஜினாமா பண்ண வேண்டிய சூழ்நிலை வரும்.  எதுக்கு ரெண்டு வருஷத்தை வீணடிக்கிறீங்க? என்று பலர் கொதித்தெழுந்து இருக்கிறார்கள்.  அந்த ரெண்டு சீட்’டை புதியவர்களுக்கு கொடுக்கலாமே என்று நியாயம் கேட்டிருக்கிறார்கள்.

 இன்னும் சிலர்,  தென் மாவட்டங்களை பத்தி யோசிச்சு  பார்க்கிறதே இல்லை.  மேற்கும் வடக்கும் மட்டும் வளர்த்தால் போதுமா?  தென்மாவட்டங்களில் கட்சி வளர வேண்டாமா?  அங்கிருப்பவருக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டாமா என்று ஆவேசப்பட்டிருக்கிறார்கள் .  

cvs

இந்த களேபரத்தில், தனக்கு கிடைக்கும் என்று பெரிதும் நம்பி இருந்த கோகுல இந்திரா கடுப்பாகி கூட்டத்திலிருந்து வெளியேறி விட்டாராம்.  தலைமை ஒரு முடிவு எடுக்க அதற்கு நாளாபுறமும் இருந்து எதிர்ப்புகள் இப்படி எழும் என்று கொஞ்சமும் எதிர்பார்க்காத இபிஎஸ் ரொம்பவே திணறிப் போய் இருக்கிறார்.  அதனால் நேற்றைய கூட்டத்தில் எந்த முடிவையும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை .  ஆனால் தலைமை திட்டமிட்டபடி முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார்,  சி.வி. சண்முகம் ரெண்டு பேருக்கும் தான் அந்த ரெண்டு சீட்.   அந்த ரெண்டு பேருக்கும் தான் அந்த ரெண்டு சீட் என்பதில் இபிஎஸ் உறுதியாக இருக்கிறாராம்.

  அந்த ரெண்டு பேருக்கும் மட்டும் ஏன் அந்த ரெண்டு சீட் ஒதுக்க இத்தனை விடாப்பிடியாக நிற்கிறார்கள் என்பது குறித்து கட்சி  வட்டாரத்தில் ஒரு தகவல் ஓடிக்கொண்டிருக்கிறது.  ஜெயக்குமார்,  சி.வி.சண்முகம் ஆகியோர் வீட்டில் தான் அடிக்கடி ரெய்டு பாய்கிறது.  அதிலிருந்து அவர்களை காக்க வேண்டும் என்றால் எம்.பி. பதவியை கொடுத்தே ஆக வேண்டிய சூழல் இருக்கிறது என்கிறதாம் தலைமை.  அந்த ரெண்டு பேரை பாதுகாப்பது முக்கியமா? கட்சியை வளர்ப்பது முக்கியமா? இது ஏன் தலைமைக்கு புரியமாட்டேங்குது?   என்று முணுமுணுக்கிறார்கள் கட்சியினர்.