’’கழுத்தில் அடித்து ஓபிஎஸ்சிடம் கையெழுத்து வாங்கினார்கள்..போயஸ்கார்டனில் அன்று நடந்தது இதுதான்!’’

 
ஒப்ச்

தனிப்பட்ட காரணத்திற்காக முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று ஆளுநருக்கு அனுப்பியிருந்த கடித்தத்தில் ஓபிஎஸ்  குறிப்பிட்டிருந்தார் .  அந்த தனிப்பட்ட காரணம் என்ன என்பது குறித்து மூத்த பத்திரிக்கையாளர் தற்போது கூறியிருக்கிறார்.  ராஜினாமா செய்யச்சொல்லி கழுத்தில் அடித்து கையெழுத்து  வாங்கினார்கள் என்பதுதான் என்கிறார்.

ச்ச்

அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதல்வர் ஜெயலலிதா 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி அன்று உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார் என்று அறிவிக்கப்பட்டது.   இதை அடுத்து இரவோடு இரவாக புதிய அமைச்சரவை பதவி ஏற்பு நடந்தது.   கண்ணீர் வடித்த படியே ஒவ்வொரு அமைச்சர்களும் பதவி ஏற்றார்கள்.  

 அதன் பின்னர் சசிகலாவுக்கு முதல்வர் நாற்காலி ஆசை வந்து விட்டதால் ஓபிஎஸ்ஐ ராஜினாமா செய்ய சொல்லி கட்டாயப்படுத்தி இருக்கிறார்.   இதற்கு ஓபிஎஸ் முதலில் மறுத்திருக்கிறார்.   பின்னர் நெருக்கடி அதிகமாகவே 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி 5ஆம் தேதி அன்று தனது முதல்வர் பதவியை ஓபிஎஸ்  ராஜினாமா செய்தார்.  இதன் பின்னர் சசிகலாவும் அந்த முதல்வர் நாற்காலியில் அமர முடியாமல் போனது.  அவர் சொத்து குவிப்பு வழக்கில் சிறைக்கு செல்ல வேண்டி இருந்ததால் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் ஆக்கினார். 

ர

 தனிப்பட்ட காரணங்களுக்காக முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று ஆளுநருக்கு அனுப்பி இருந்த கடிதத்தில் ஓபிஎஸ் குறிப்பிட்டு இருந்தாலும் திடீரென்று பிப்ரவரி 8ஆம் தேதி அன்று சென்னை மெரினா கடற்கரையில் ஜெயலலிதா சமாதி முன்பாக தர்ம யுத்தத்தை தொடங்கினார்.  அப்போது தன்னை கட்டாயப்படுத்தி முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வைத்தார்கள் என்று வெடித்தார் ஓபிஎஸ்.

தனிப்பட்ட காரணங்களுக்காக என்று  ஆளுநருக்கு அனுப்பி இருந்த கடிதத்தில் குறிப்பிட்டது சசிகலா கட்டாயப்படுத்தினார் என்பதாக சொல்லி இருந்தார் ஓபிஎஸ்.  ஆனால் அந்த தனிப்பட்ட காரணங்களில்  சாதாரணமாக கட்டாயப்படுத்தவில்லை.  ஓபிஎஸ்சின் கழுத்தில் அடித்து கையெழுத்து வாங்கினார்கள்.  ராஜினாமா செய்யச்சொல்லி போயஸ் கார்டனில் வைத்து கழுத்தில் அடித்து ஓபிஎஸ்சிடம் கையெழுத்து வாங்கியது மன்னார்குடி மாபியாதான் என்கிறார்  பத்திரிகையாளர் சத்யாலயா ராமகிருஷ்ணன்.  தனியார் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில் அவர் இதைச் சொல்லியிருக்கிறார்.