எம்ஜிஆரை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாட காரணம் இதுதான்! அதனால்தான் இன்னும் எம்ஜிஆர் மயக்கம் இருக்கிறது! திருமாவளவன் பேச்சு

 
ம்ட்

எம்ஜிஆரை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாட காரணம் என்ன? மறைந்து இத்தனை ஆண்டுகள் ஆனாலும் மக்களிடம் இன்னும் எம்ஜிஆர் மயக்கம் இருக்கிறது என்றார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவன் திருமாவளவன்.

 இரும்பன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பங்கேற்று பேசியனர்.  அப்போது,   திரைப்படத் துறையின் மூலம் அரசியலில் மாற்றம் ஏற்படுத்த முடியும்.  எந்த உலகத்திலும் இப்படி இல்லை.  ஆனால் தமிழகத்தில் இப்படி இருக்கிறது.  திரைப்படத்துறையில் முதல்வரை தேடுவதும் இங்கு உண்டு.  

ட்

 சினிமாவுக்கு ஆட்சி அதிகாரத்தை மாற்றுவதில் பங்கு இருக்கிறது.   அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா முதல்வராக இருந்துள்ளார்கள்.   சினிமாவில் இருந்து வந்துள்ளார்கள்.   விஜயகாந்த் சினிமாவில் இருந்து எதிர்க்கட்சித் தலைவராக ஆகியிருக்கிறார்.    தமிழக அரசியலில் 50 ஆண்டுகள் திரைப்படத்துறையின் பங்கு உண்டு. சினிமாவுக்கு திராவிட அரசியலை மக்களிடம் கொண்டு சேர்த்ததில் பங்கு இருக்கிறது. 

 சினிமாவில் இருந்தவர்கள் 50 ஆண்டுகளாக ஆட்சி அதிகாரத்தில் அமர வாய்ப்பு இருக்கிறது .  எம்ஜிஆர் திரையில் அழகை காட்டி ஆட்சியைப் பிடிக்கவில்லை.  அரசியல் பேசினார் . பெரியாரின், அண்ணாவின் கொள்கைகளை பேசினார் .  சமூக நீதி அரசியல் தொழிலாளிகளின் அரசியலை பேசினார்.  சினிமாவை வருமானத்திற்கு மட்டும் பயன்படுத்தவில்லை.  கொள்கைகளுக்காகவும் பயன்படுத்தி இருக்கிறார்கள்.   சமூக பிரச்சனை திரைத்துறையிலும் முன்னேற்றம் கண்டு இருக்கிறது . 

ம்

 எம்ஜிஆர் தன் அணுகுமுறைகள் மூலம் மக்களை ஈர்த்தார்.  எம்ஜிஆரை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாட காரணம் என்ன? அவர் மக்களை நேசித்தார்.  மக்களிடம் அவர் காட்டிய அணுகுமுறையும் தான் .  எம்ஜிஆர் படத்தில் மக்கள் உள்ளத்தை தொடும் காட்சிகள் இருக்கும்.  மறைந்து இத்தனை ஆண்டுகள் ஆனாலும் இப்போதும் மக்களிடம் எம்ஜிஆர் மயக்கம் இருக்கிறது.

 எம்ஜிஆர் வசனம் எழுத மாட்டார். பாடல் எழுத மாட்டார். இசையமைக்க மாட்டார். ஆனால் அவை எப்படி இருக்க வேண்டும் என்று கூறுவார்.  அதே போல தேர்ந்தெர்ந்து நடிக்க வேண்டும் மக்களோடு இயங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் திருமாவளவன்.  அவர் மேலும் ,   திரை உலகம் கார்ப்பரேட் மாயமாகி வருகிறது .பெரும் பணம் கொண்டு வருகிறார்கள்.  எல்லாவற்றையும் கார்ப்பரேட் மயமாக்குவது ஆபத்தானது.  கார்ப்பரேட் மயமாவதை தடுக்க போராட வேண்டியது இருக்கிறது.

 முன்பெல்லாம் 30 லட்சத்தில் பணம் எடுத்தார்கள்.  குறைந்த தொகையில் விநியோகம் செய்தார்கள்.  இப்போது அப்படி இல்லை.  ஒரு நபர் கையில் திரையரங்குகள் வந்து விட்டால் என்ன ஆகும்? திரை துறை கார்ப்பரேட் மயத்திற்கு இரையாகிக் கொண்டிருக்கிறது.  தொழிலாளர்கள் விநியோகஸ்தர்கள் இயக்குனர்கள் இதனால் பாதிக்கப்படுகிறார்கள்.  இதை தொழில் போட்டி மட்டுமல்ல தொழிலாளிகளின் உரிமைகளையும் பறிப்பதாகும் என்றார்.