ஜெயலலிதா ஹெலிகாப்டரில் சென்று வந்த நோக்கம் இதுதான் -சசிகலா பரபரப்பு

 
h

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நிகழ்ச்சிகளுக்கு செல்லும் போது ஹெலிகாப்டரில் தான் சென்று வந்தார்.  அரசு நிகழ்ச்சிகள் என்றாலும், கட்சி பிரச்சாரம் என்றாலும் அவர்  ஹெலிகாப்டரில்தான் சென்று வந்தார்.  

jh

இதை அப்போது எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்தனர் . ஜெயலலிதாவை விடவும் வயதில் மூத்த கருணாநிதி,  திருவாரூர் மற்றும் பல மாவட்டங்களுக்கு செல்லும் போது சாலை மார்க்கமாக செல்கிறார்.  ரயிலில் செல்கிறார், காரில் செல்கிறார்.  ஆனால் ஜெயலலிதா மட்டும் ஆகாய மார்க்கமாக செல்கிறார் என்ற விமர்சனத்தை தொடர்ந்து முன் வைத்து வந்தனர் திமுகவினர்.

jk

ஜெயலலிதா ஹெலிகாப்டரில் சென்று வருவதற்கு அவரின் உடல்நிலை காரணம் என்று,  பலரும் சொல்லி வந்தனர்.  ஆனால், ஜெயலலிதா  ஏன் ஹெலிகாப்டரில் சென்று வந்தார் என்பதுகுறித்து தற்போது சசிகலா தெரிவித்திருக்கிறார்.

jj

கடலூர் மாவட்டத்தில் நெல்லிக்குப்பம் அடுத்த கெடிலம் ஆற்றில் குளிக்கச் சென்ற 7 பேர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவத்தை அடுத்து  உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு சசிகலாவின் நேரில் சென்று ஆறுதல் கூறினார்.   அப்போது அவரை செய்தியாளர்கள் சந்தித்தனர்.

he

 அவர்களிடம் பேசியபோது,  தமிழக அரசின் தற்போதைய நடவடிக்கைகள் குறித்து பேசிய சசிகலா,    காவலர்களின் பணிச்சுமை குறித்த பேச்சுக்கு பதிலளித்தார்.

o

  ’’ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் காவலர்களுக்கு பணிச்சுமை அதிக அளவில் கொடுக்கப்படவில்லை.   அதனால்தான் ஜெயலலிதா மாவட்ட அளவில் நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது கூட  ஹெலிகாப்டரில் சென்று வந்தார்.  சாலை மார்க்கமாக சென்றால் காவலர்கள் அதிக அளவில் சாலையில் நிற்கக்கக்கூடிய நிலை ஏற்படும். அந்த அவல நிலையை தடுப்பதற்காகத்தான் ஜெயலலிதா ஹெலிகாப்டரில் சென்று வந்தார்.  போலீசாரும் மனிதர்கள்தான் என்ற நோக்கத்தில்தான் ஜெயலலிதா அப்படி செயல்பட்டார்.  மாவட்ட நிகழ்ச்சிகளுக்கு ஜெயலலிதா ஹெலிகாப்டரில் சென்று வந்ததற்கான நோக்கம் அதுதான்’’ என்றார்.