துரோகம் பண்ணிட்டு அங்க போய் நிக்குறாங்க..இது சீப் பாலிடிக்ஸ் - வன்னியரசு பரபரப்பு பேட்டி

 
வ்ச்க்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் வன்னியரசு நமது toptamilnews இணையதளத்திற்கு அளித்த சிறப்பு பேட்டி இது. குடியரசுத்தலைவர் தேர்தல், இளையராஜாவுக்கு அளிக்கப்பட்ட நியமன எம்.பி. பதவி ஆகியவற்றில் விடுதலை சிறுத்தைகளின் நிலைப்பாடு குறித்து அவர் நம்மிடையே மனம் திறந்து பேசினார்.

வ்

மத்திய அரசு இசையமைப்பாளர் இளையராஜாவை நியமன எம்.பியாக அறிவித்திருக்கிறது. இதை நீங்க எப்படி பார்க்கிறீர்கள்?

இளையராஜாவின் உயரத்திற்கு இந்த எம்.பி.  பதவி ரொம்ப சாதாரணம்.  உண்மையில் அவரை கவுரவிக்க வேண்டும் என்றால் அவர் பெயரில் இசைப்பல்கலை தொடங்க வேண்டும்.  இல்லை என்றால் அதற்கு இணையாக செய்ய வேண்டும்.  நியமன எம்.பி. பதவியால் இளையராஜாவுக்கு பெருமை ஒன்றும் இல்லை.

பாஜக இதை செய்திருப்பதால்தான் உங்களுக்கு பாராட்ட மனமில்லையா? ஒருவேளை காங்கிரஸ் இதைச்செய்திருந்தால் பாராட்டியிருப்பீர்களா?

தென்னிந்தியாவை கைப்பற்றுவோம் என்று அமித்ஷா வெளிப்படையாக பேசுகிறார்.  அவர் பேசி ஐந்தாவது நாளில் நான்கு பேருக்கு நியமன எம்.பி. பதவி கொடுக்கப்படுகிறது.  அந்த நாலு பேருமே தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்கள்.   கேரளாவைச் சேர்ந்த பி.டி.உஷா, தமிழ்நாட்டை சேர்ந்த இளையராஜா, மற்ற இருவர் ஆந்திரா, தெலுங்கானா. நான்கு மாநிலங்களை குறிவைத்துதான் இதைச் செய்திருக்கிறார்கள்.   இங்கே இளையராஜாவுக்கு கொடுத்ததை விமர்சிக்கவில்லை.  எதற்காக கொடுக்கிறார்கள் என்கிற உள்நோக்கத்தை தான் நாங்கள் விமர்சிக்கிறோம்.  இளையராஜாவின் புகழை திருடுகிற சீப் பாலிடிக்ஸ்தான் இது.  அதைத்தான் நாங்க சாடுகிறோம்.

வ்வ்

குடியரசுத்தலைவர் தேர்தலில் பாஜக சார்பில் பழங்குடியின சமூகத்தை சேர்ந்த திரௌபதி முர்முவை நிறுத்தியிருக்காங்க.  எதிர்க்கட்சிகள் சார்பில் பார்ப்பன சமூகத்தை சேர்ந்த யஷ்வந்த் சின்ஹாவை நிறுத்தியிருக்காங்க.  எதன் அடிப்படையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி யஷ்வந்த் சின்ஹாவை ஆதரிக்கிறது?

யஷ்வந்த் சின்ஹாவை ஆர்.எஸ்.எஸ். என்று சொல்லுவதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்.  அவரின் அரசியல் தொடக்கம் என்பது வேறு.  சந்தர்ப்பவாத்தால் பாஜகவில் சேர்ந்து அமைச்சரானார்.  பாஜகவில் இருந்தாலும் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். குறித்து பலமுறை விமர்சனம் செய்திருக்கிறார்.  அவர் பாஜகவை விட்டு வெளியேறும்போது,  பாஜகவின் கோட்பாடு நாட்டுக்கு பேராபத்தாக இருக்கிறது.  அதனால் நான் வெளியேறுகிறேன்.  பாஜகவில் இருந்ததால்தான் அதன் ஆபத்தை வெளியே வந்து சொல்கிறார்.  நாங்கள் யாரையும் பிறப்பின் அடிப்படையில் பார்ப்பதில்லை.  அவர்கள் கொண்ட கொள்கையின் அடிப்படையில்தான் பார்க்கிறோம்.  எத்தனையோ தலித்துகள் துரோகம் பண்ணிட்டு பாஜகவில் போய் நிற்கிறார்கள்.  அவர்களை எல்லாம்  தலித்துகள் என்கிற அடிப்படையில் ஏற்றுக்கொள்ள முடியுமா என்ன?

மேலும் விரிவான பேட்டியை காண....