இதற்கு பின்னால் இருக்கும் பாஜக விளையாட்டு இதுதான்- நாஞ்சில் சம்பத்

 
n

 இன்றைக்கு மராட்டியத்தில் செய்கிற வேலையை நாளைக்கு  தமிழகத்தில் செய்வார்கள்.   இடைச்செருகலாக வந்த எடப்பாடி பழனிச்சாமி ஓபிஎஸ்-ஐ ஓரம்கட்டுகிறார்.  உயர்நீதிமன்ற தீர்ப்பை கண்டுகொள்ளப்படாமல் அத்துமீறலை நடத்தியிருக்கிறார்கள்.  இதற்குப் பின்னால் பாஜக விளையாடி இருக்கிறது.  பாஜகவின் லாஜிக்கில் அதிமுக பலியாகி இருக்கிறது என்கிறார் நாஞ்சில் சம்பத்.

 பூந்தமல்லி தொகுதி திமுக இளைஞரணி சார்பில் திராவிட மாடல் பயிற்சிப்பட்டறை நடந்தது.   பூந்தமல்லியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்த இந்த பயிற்சி பட்டறையில் அமைச்சர் நாசர்,  திமுக நிர்வாகி நாஞ்சில் சம்பத் உள்ளிட்டோர் பங்கேற்று இளைஞர் அணி நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்கள்.

ன்ன்

அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாஞ்சில் சம்பத், அதிமுக விவகாரம் குறித்து தனது கருத்தினை தெரிவித்தார்.    ’’எடப்பாடி பழனிச்சாமி இடைச்செருகலாக வந்தவர்.   அவர் ஓபிஎஸ்-சை ஓரங்கட்டுவதாக  சொல்லிக்கொண்டு ஒரு ஜனநாயக அணி நிதியை அரங்கேற்றி இருக்கிறார்.  உயர்நீதிமன்ற தீர்ப்பு கண்டுகொள்ளப்படவில்லை உயர் நீதிமன்ற தீர்ப்பின் மீது அத்துமீறலை நடத்தியிருக்கிறார்கள்.  இதற்குப் பின்னால் பாஜக விளையாட்டு இருக்கிறது என்பதை நாடு புரிந்து கொண்டு இருக்கிறது’’ என்றார்.

 தொடர்ந்து அது குறித்து பேசிய நாஞ்சில் சம்பத்,  ’’இன்றைக்கு மராட்டியத்தில் செய்கின்ற வேலையைத்தான் நாளைக்கு தமிழகத்திலும் அவர்கள் செய்வார்கள் .செல்வாக்கு உள்ள கட்சியை உடைப்பதும், உருக்குலைப்பதும்,  ஊடுருவதும்தான் பாஜகவின் லாஜிக்.  இப்போது  பாஜகவின் லாஜிக்கிற்கு அதிமுக பலியாகி இருக்கிறது’’ என்றார்.