இந்த அரசுக்கு குழு அரசாங்கம் என்று பெயர் வைத்து விடலாம் - கிண்டலடித்த இபிஎஸ்

 
எட்

இந்த அரசுக்கு குழு அரசாங்கம் என்று பெயர் வைத்து விடலாம் என்று கிண்டல் செய்தார் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. 

 திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் தொண்டர்கள் மத்தியில் பேசினார் எடப்பாடி பழனிச்சாமி .  அப்போது,   தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவே இல்லை.  மக்களுக்கு நன்மை கிடைக்கின்ற எந்த திட்டத்தையும் திமுக அரசு நிறைவேற்ற வில்லை என்றார்.   திமுக ஆட்சியில் சொத்து வரி, வீட்டு வரி, மின் கட்டணம் உயர்ந்து விட்டது என்றும் குற்றம் சாட்டியவர்.

ச்ச்

தொடர்ந்து பேசிய  எடப்பாடி பழனிச்சாமி,   முதல்வர் மு. க. ஸ்டாலின் 38 அறிவிப்புகள் கொண்டுவந்து 38 குழு அமைத்து விட்டார்.  அதனால் இந்த அரசாங்கத்திற்கு குழு அரசாங்கம் என்று பெயர் வைத்து விடலாம் என்று கிண்டல் செய்தார்.  

அதுகுறித்து மேலும் பேசிய எடப்பாடி பழனிச்சாமி,  அமைச்சர்கள் அதிகாரிகளை நம்பாமல் குழு அமைத்து அறிக்கை வந்த பின்னரே திட்டங்களை திமுக அரசு நிறைவேறுகிறது.  என்றைக்குழு அறிக்கை அளிப்பது என்றைக்கு அரசாங்கம் செயல்படுவது என்ற கேள்வியை எழுப்பினார்.

 எந்த ஒரு திட்டத்தையும் நிறைவேற்ற கூடாது என்பதற்காகவே ஒரு குழுவை அமைத்து மக்களை ஏமாற்றுகின்ற அரசாங்கம் தற்போது முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இருக்கின்ற அரசாங்கம் என்று கடுமையாக விமர்சித்தார்.

ஆன்லைன் ரம்மி நிறுவனங்களும் திமுகவும் உடன்பாடு செய்துள்ளது என்றும் குற்றம் சாட்டினார்.