திமுகவின் அண்டப்புளுகு, ஆகாசப்புளுகு! தற்போது திராவிட மாடல் புளுகு! பாஜக விமர்சனம்

 
narayanan thirupathi

திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது சட்டமன்றத்தில் 8 வழிச்சாலை குறித்து பேசிய முதல்வர் முக ஸ்டாலின், “ திமுக சாலை போடுவதற்கு எதிரி அல்ல. விவசாயிகளை அழைத்துப்பேசி, அவர்களுக்கு என்ன தேவை என்று புரிந்துகொண்டு பிரச்சனையை தீர்த்துவிட்டு சாலையைப் போடுங்கள். 8 வழிச்சாலை போடக்கூடாது என எந்த காலத்திலும் திமுக சொல்லவே இல்லை” என்று கூறியதாக அமைச்சர் எ.வ.வேலு இன்று செய்தியாளர்களிடம் கூறினார். 

See the source image

இதனை விமர்சித்துள்ள பாஜகவை சேர்ந்த நாராயணன் திருப்பதி, “8 வழிச்சாலை போடக்கூடாது என எந்த காலத்திலும் திமுக சொல்லவே இல்லை ! என கூறியிருக்கிறார் அமைச்சர் எ.வ.வேலு ! எதிர்க்கட்சியாக இருந்த போது மக்கள் நல திட்டங்களையும் , கட்டமைப்புகளை பெருக்கும் திட்டங்களையும் தொடர்ந்து எதிர்த்ததோடு , சில தீய சக்திகள் செய்த பல்வேறு கலகங்களுக்கு தன் ஆதரவையும் அளித்தது திராவிட முன்னேற்ற கழகம் . மேலும் , எதிர்க்கட்சியாக இருந்த போது , " சேலம் எட்டுவழிச்சாலை விவகாரத்தில் மீண்டும் தமிழக மக்களுக்கு துரோகம் செய்வது கடும் கண்டனத்துக்குரியது " - என்று 31/05/2019 திரு . முக ஸ்டாலின் சொன்னது உண்மையா இல்லையா ? " தேர்தல் வரை , பயத்தின் காரணமாக திட்டம் செயல்படுத்தப்படாது என்று பொய் வாக்குறுதி கொடுத்து விட்டு தேர்தல் முடிந்த பிறகு வேதாளம் முருங்கை மரம் ஏறியது போல மீண்டும் எட்டு வழி சாலை பற்றி திரு பழனிச்சாமி பிதற்ற ஆரம்பித்து விட்டார் " .- என்று டி ஆர் பாலு அவர்கள் , 13/07/2019 அன்று சொன்னது உண்மையா இல்லையா ?

மக்களின் நலனுக்காக எட்டு வழி சாலை திட்டத்தை மத்திய ய மாநில அரசு உடனே கைவிட வேண்டும்- என்று 06/06/2020 அன்று முகஸ்டாலின் அவர்கள் சொன்னது உண்மையா இல்லையா ? திமுக ஆட்சி அமைந்த பின் , '17 / 06 / 2021 அன்று மாண்புமிகு இந்திய பிரதமரிடம் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் வழங்கிய சுருக்க உள்ளடக்க குறிப்பின் 15 ( e ) ன் படி , சென்னை - சேலம் பசுமை வழிச்சாலை திட்டத்தை கைவிட கோரி மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது ' என்று தமிழக அரசின் செய்தி வெளியீடு எண் : 292 ல் குறிப்பிடப்பட்டுள்ளதா இல்லையா ? : சேலம் எட்டு வழி சாலை என்பது மிக அவசியமான ஒன்று என்பதை நாம் தொடர்ந்து சொல்லி வருகிறோம் . எதிர்க்கட்சியாக இருந்த போது , அரசியல் லாபத்திற்காக வேண்டுமென்றே மக்களை தூண்டிவிட்டு , சில தீய சக்திகளுக்கு துணை நின்று இந்த திட்டத்தை எதிர்த்த திராவிட முன்னேற்ற கழகம் , இன்று ஆட்சியில் அமர்ந்த பின் கட்டமைப்பை பெருக்க வேண்டுமானால் , பொருளாதார வளர்ச்சி வேண்டுமானால் , தொழில்துறையில் முன்னேற்றம் வேண்டுமானால் , வேலை வாய்ப்பை பெருக்க வேண்டுமானால் எட்டு வழிச்சாலை அவசியம் என்பதை தற்போது உணர்ந்துள்ளது .

எதிர்க்கட்சியாக இருந்த போது , அண்டப்புளுகு , ஆகாசப்புளுகு என்று அடுக்கி கொண்டேயிருந்த தி மு க , இப்போது ' 8 வழிச்சாலை போடக்கூடாது என எந்த காலத்திலும் திமுக சொல்லவே இல்லை என்று சொல்வதற்கு பெயர் ' திராவிட மாடல் புளுகா ?” எனக் குறிப்பிட்டுள்ளார்.