பாஜக இந்து ஒற்றுமையை விரும்பவில்லை; இந்து ஓட்டை தான் விரும்புகிறார்கள் - திருமா

 
thiruma

கோவை காந்திபுரம் சித்தாபுதூர் வி கே கே மேனன் சாலையில் மே 17 இயக்கம் சார்பில் திருமுருகன் காந்தி தலைமையில் கோவை மறந்த விடுதலைப் போர் வரலாறு மீட்பு மாநாடு நடைபெற்றது. இதில் பல்வேறு இயக்கங்கள், அமைப்புகள், கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர். இதில் தந்தை பெரியார் திராவிட கழக பொதுச்செயலாளர் கு. ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Cartoonist held in TN for obscene depiction of VCK chief Thirumavalavan |  The News Minute

இந்நிகழ்வில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், “கோவையை மையமாக வைத்து முதல் சுதந்திர போராட்டத்தில் 42 பேரில் 36 பேர் இஸ்லாமியர்கள் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர். வரலாற்று இருட்டடிப்பும்,வரலாற்று திரிப்பும் காலம் காலமாக உள்ளது. ஒரே தேசம் ஒரே கலாச்சாரம் அடிப்படையில் பாஜக பன்மைதன்மையை சிதைத்து விடுகிறார்கள். மதம், மொழி, சாதியை கடந்து ஆங்கிலேயரை எதிர்த்து அன்று ஒன்று சேர்ந்து செயல்பட்டார்கள். சேரர், சோழர், பாண்டியர் முழு வரலாறு பற்றி அமித்சாவுக்கு கவலை.கோவையை அடித்தளமாக வைக்க பாஜக செயல்படுகிறது.

இஸ்லாமியர்களுக்கு எதிரான உளவியல் கட்டமைப்பை வைத்து பாஜக செயல்படுத்துகிறது. அருந்ததியர்களை கைப்பற்ற பாஜக வேலை செய்கிறது. அப்பேற்பட்ட கோவையில் இந்த மாநாடு நடைபெறுவது பாராட்டுகுறியது அண்ட புழுகு ஆகாச புழுகை பாஜக கட்டவில்கிறது. அப்பட்டமாக ஆர்எஸ்எஸ் காரராக ஆளுனர் செயல்படுகிறார். ஆளுனர் அரசியலைமைப்பு சட்டத்தை பார்க்காமல் அடுத்த வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். பெரியார் எதிர்ப்பு என்றால் சனாதன ஆதரவு என்பது நுட்பம். திராவிடம் ஆரியத்திற்கு எதிரானது. பெரியாரியம் பகுத்தறிவை புகட்டுகிறது. திமுகவை விமர்சிக்க நாம் குறுக்கிடவில்லை.ஆனால் திராவிடம் என்ற கருத்தை அவர்கள் எதிர்கிறார்கள். பெரியார் குறிவைக்கபடுகிறார். திருவள்ளுவருக்கு காவி அணிகிறார்கள். அம்பேத்கரை இந்துத்துவ அடையாளமாக ஆர்எஸ்எஸ் காட்டுகிறது.
வரலாற்றை திணிக்கிறார்கள். தமிழ்நாட்டை குறிவைத்து விட்டார்கள்.கோவையில் இருந்து தமிழகத்தை கபளிகரம் செய்கிறார்கள்.
அதிமுக எதிர்கட்சியாக இல்லாமல் பாஜக வளர செயல்படுகிறது. அதிமுகவை காலி செய்கிறார்கள். எல்லோரும் இந்து என்று சான்றிதல் போடமுடியுமா.?அதை சனாதனம் ஒத்துகொள்ளுமா..? இந்து ஒற்றுமையை அவர்கள் விரும்பவில்லை.இந்து ஓட்டை தான் விரும்புகிறார்கள். சங்பரிவார்களின் திட்டத்தை முறியடிக்க அனைவரும் அகில இந்திய அளவில் ஒன்றுபட வேண்டும்” என தெரிவித்தார்.