2021 தேர்தல் பிறகு அதிமுக கூட்டணி காணமல் போய்விட்டது - திருமாவளவன்

 
thirumavalavan

2021 தேர்தல் பிறகு அதிமுக கூட்டணி காணமல் போய்விட்டது, பாஜக தனித்து இயங்குகிறது என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே அத்திமலைபட்டு கிராமத்தில் விடுதலை
சிறுத்தை கட்சியினர் நிர்வாகி பெல் ரவி என்பவரின் வீட்டில் நூலக
திறக்கும் விழாவிற்கு வருகைபுரிந்த விடுதலை சிறுத்தை கட்சியினர் தலைவரும்
எம்.பியுமாக தொல்.திருமாவளவன் நூலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து
நூலகத்தை பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எம்.பி திருமாவளவன், "தமிழகத்தில் பாஜக
கூட்டணி ஓன்று கிடையாது 2021 தேர்தல் பிறக அதிமுக பாஜக கூட்டணி காணமல்
போய்விட்டது. பாஜக தனித்து இயங்குகின்றன அதிமுக கூட்டணி அமைக்க போவதாக
கூறுகின்றனர் அது  ஓ.பி.எஸ் இ.பிஎஸ் கூட்டணிதான் வரும் என கருதுகின்றேன்.

உலகில் மூத்த மொழி சமஸ்கிருதம் என பேசிய பி.ஜே.பி காசி தமிழ் சங்கம்
மாநாட்டில் தமிழை உயர்த்தி பிடிக்க வேண்டி மோடி அமித்ஷா தள்ளபட்டுள்ளனர்.
சமஸ்கிருதம் சமமாக தமிழை ஏற்று கொண்டுள்ளனர். எல்லாவற்றையும் விட தமிழ்
மொழி சொல்லும் காலம் வரும். மேலும் அரசு மருத்துவமனையில் கவனகுறைவால் உயிரிழப்பு சம்பவம எக்காலத்திலும் நடக்ககூடாது கடுமையான நிலைபாட்டை அரசு எடுக்க வேண்டும்
ஏழை எளிய மக்கள் அரசு மருத்துவமனையை நம்பி வருகின்றனர்.

நம்பிக்கையை தகர்த்து போல் இச்சம்பவம் நடைபெற்றுள்ளன இதனால்
மருத்துவர்கள் ஊழியர்கள் எவ்வாறு பணியாற்றிகின்றனர் என தமிழக முதல்வர்
கண்காணிக்க வேண்டும் இறந்த வீராங்கனைக்கு வழங்கபட்ட நிதி போதாது கூடுதலாக
வழங்க வேண்டும் என விடுதலைசிறுத்தை கட்சி கோரிக்கை வைக்கின்றன" எனக் கூறினார்.