எம்ஜிஆர், ஜெயலலிதா உண்மையான மதிப்பு வைத்திருந்தால் அதிமுகவினர் பாஜக கூட்டணியில் இருந்து வெளியே வாருங்கள்- திருமா
கோவை சிவானந்தாகாலனி பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் மணிவிழா பொதுக்கூட்டம் பறை இசை முழக்கத்துடன் தொடங்கப்பட்டுள்ளது. இதில் முன்னாள் அமைச்சர் பா.சிதம்பரம், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி , மனிதநேயமக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விழாவில் பேசிய தொல்.திருமாவளன் “வழக்கம் போல ஒரு சராசரி பிறந்தநாள் விழாவாக கொண்டாடாமல் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்ட நிகழ்வுகளாக ஒருங்கிணைக்க வேண்டும் என்று நாம் உயர்நிலை குழுவில் முடிவு செய்தோம். நமக்கு இந்த ஆண்டுக்கான கருப்பொருளை கொடுத்தவர்கள் நம்முடைய மதிப்பிற்குரிய சங்கீகள். சனாதன சக்திகளை தனிமைப்படுத்துவோம் என்பதுதான் நம் பொருள். வரும் தேர்தலில் பாஜகவை தனிமை படுத்துவோம் என்ற கருப்பொருளை கொண்டுள்ளோம். இந்த நிகழ்வில் நம்முடைய காங்கிரஸ் பேரியக்கத்தின் மூத்த தலைவர் ப.சி இந்தியாவின் பக்குவம் நிறைந்த தலைவர் வந்துள்ளது எனக்கு கிடைத்த அங்கீகாரம்.
ப.சிதம்பரம் தனது துணிச்சலான கருத்தை அவர் பதிவு செய்துள்ளார். காந்தியடிகள் அம்பேத்கரின் கருத்தியல் முரணை சுட்டி காட்டியுள்ளார்.இது அறிவின் பேராண்மை. இப்படி பேச தெளிவும்,துணிவும் தேவை. அவர் அம்பேத்கர் பக்கம் நின்று பேசி உள்ளார். அப்படி என்றால் காந்தியடிகளை குறைத்து பேசவில்லை. காந்திக்கு அம்பேத்கருக்கும் நடைபெற்ற கருத்து மோதல். நாகரீகமான மோதல். வன்முறையில்லாத மோதல். இந்த விவாதம் கூர்மை பட வேண்டும். நாம் இந்துக்களுக்கு எதிரி என சித்தரிக்கிறார்கள். இந்துத்துவத்தை எதிர்த்தால் இந்துக்களுக்கு எதிரி என திசை திருப்புகிறார்கள். மதத்தை யாரும் கொச்சைப்படுத்தவில்லை. சைவம் வைணவத்தை பற்றி பேச காரணம் நீங்கள் தொடங்கி வைத்த விவாதம். ஏழை எளிய மக்களின் உணர்வுகளை, மத நம்பிக்கையை உங்கள் ஆதாயத்திற்கு பயன்படுத்துகிறீர்கள். மடாதிபதிகள் ஆர்எஸ்எஸ் காரர்களை செவிலில் அறைய வேண்டும். காங்கிரஸ் தேசியம் பேசுவது இந்தியா நம் நாடு என்ற கருத்து நாட்டின தேசியம்.
பாஜக ,ஆர் எஸ் எஸ் கட்டமைக்கும் தேசியம் மதவெளி தேசியம். இதற்கு அப்பாவிகளை கிறிஸ்தவர்களை இஸ்லாமியர்களை எதிரியாக நிறுத்துகிறார்கள். வெறுப்பு அரசியல். தமிழ் தேசியம் என்பது மொழிவழி தேசியம். இந்து ராஷ்டிரம் என்பதை விட கம்யூனல் ராஷ்ட்ரம் என்பது தான் சரி. பட்டேலுக்கு சிலை வைக்க நீங்கள் யார். காந்தியை சிறுமைப்படுத்த விரும்புகிறார்களா..? சாவக்கரை போற்றுகிறார்கள்.. காந்திக்கும் மலர் தூவுகிறார்கள்.. சமூகப் பிரிவினைவாதம் தான் ஆர்எஸ்எஸ் கோட்பாடு. ஆர் எஸ் எஸ் இன் முதல் எதிரி அம்பேத்கர். மதச்சார்பற்ற கொள்கை கொண்டதற்கு காரணம் அரசியல் சாசனம். நீண்ட நெடிய விவாதத்திற்கு பிறகு வந்ததுதான் அரசியலமைப்புச் சட்டம். ஒற்றை மனிதன் ஏந்திய ஆயுதம் தான் இந்த அரசியல் சாசனம். சனாதனத்தை அடித்து நொறுக்குவது அரசியல் அமைப்புச் சட்டம். அதுதான் அவர்களுக்கு தடை. சோசலிஸ்ட், செக்யூர் என்று இந்திராகாந்தி சாசனத்தில் அமைத்துள்ளார்.. இஸ்லாத்தை, கிறிஸ்துவத்தை விமர்சிக்கிறாயா என்கிறார்கள். அதில் இந்த தீண்டாமை இல்லை. அம்பேத்கர் இந்துவாக சாகமாட்டேன் என தெரிவித்துள்ளார்.
இன்னொரு வாழ்க்கை முறையை தேர்வு செய்கிறார்கள் என்றால் எவ்வளவு வலி இருந்திருக்கும் என்பதை எண்ணி பார்க்க வேண்டாமா. திருமாவளவன் சொல்லியா மதம் மாறுகிறார்கள். அவர்கள் எந்த வலியுடன் மதம் மாறினர். சுய விமர்சனம் செய்யும் துணிச்சல் உள்ளதா..? சாதி வர்ணம் எல்லாம் மறந்து விடுங்கள் என ஆர் எஸ் எஸ் தலைவர் தெரிவித்துள்ளார். அவர் அந்த சாதி ஒடுக்கு முறையில் வாழ்ந்து பார்த்திருந்தால்ம் தெரிந்திருக்கும். இந்தியாவில் ஆரியம் திராவிடம் என்ற இரண்டு பிரிவு தான் இருந்தது. இந்து பெயரில் தங்களை பாதுகாத்துக் கொள்கிறார்கள் பார்பனர்கள். அதனால் தான் சனாதனம் என்கிறார்கள். மோகன் பகவத்தே சாதியும் வர்ணமும் மறக்க கூடியது அல்ல அழித்தொழிக்க கூடியது. பார்ப்பனர்களுடன் தொட்டுக் கொடுக்கும் சங்கராச்சாரி. தமிழிசைக்கு நடந்தது என்ன.? தமிழிசையை சங்கராச்சாரியார் மடாதிபதியாக ஆக்க முடியுமா..? அல்லது பொன்னார் அவர்களை மடாதிபதி ஆக்க முடியுமா. மன்னாதி மன்னனாக இருந்தாலும் கருவறைக்குள் இடமில்லை என்று விரட்டுகிறீர்கள்.
ஒரே ஒரு நாள் செருப்பை தைக்கும் தொழிலாளியாக வாழ்ந்து காட்ட முடியுமா, மீனவராக வாழ்ந்து காட்ட முடியுமா. அல்லது சந்தையில் இருந்து வியாபாரம் செய்ய முடியுமா..? உடல் உழைப்பு இல்லாமல் பருப்பும் நெய்யும் சாப்பிட முடிகிறது அது எது அது தான் சனாதனம். என்னை கல் உடைக்க சொல்கிறது சனாதனம். ஆர்.எஸ் .எஸ் கலவரத்தில் சூத்திரர்களை, வைசியர்களை தூண்டி விட்டு வேடிக்கை பார்கிறீர்கள். இஸ்லாமியர்களுக்கு எதிராக ஆயுதங்களை கூர்மைப்படுத்துங்கள் என்கிறார்கள் இது ஆபத்து. காங்கிரஸை தவிர்த்து விட்டு ஒரு அமைப்பை கட்டுவது பிஜேபிக்கு வழிவகுக்கும் என நான் தெலுங்கானாவில் தெரிவித்துள்ளேன். தற்போது அண்ணாமலை என்ற சூத்திர இந்துவை வைத்து ஆர்எஸ்எஸ் வாலாட்டுகிறார்கள். அங்கங்க பெட்ரோல் குண்டு வீசுவது அவர்கள் தான். ஆர் எஸ் எஸ் பேரணி நடத்துவது பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கா, தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காகவா. இந்தியாவின் தலைநகரை மாற்றத் திட்டமிடுகிறார்கள். கொடியை மாற்ற திட்டம் இடுகிறார்கள். இது ஜனநாயகத்துக்கு எதிர். மீண்டும் ஆட்சிக்கு வந்தால் என்னவாகும். இந்துக்களை யார் காப்பாற்றுவார். சனாதன சக்திகளை தனிமைப்படுத்த வேண்டும்.
இந்துக்களை காப்பாற்ற தான் நாம் குரல் கொடுக்கிறோம். எவ்வளவு நெஞ்சு அழுத்தம் இருந்தால் பெரியார் சிலைக்கு காவி சேலை சுத்துகிறான். இந்த மேடையில் அண்ணாமலை போன்ற காமெடியன்கள் இல்லை. இந்தக் கூட்டம் கருத்து கேட்க திரண்டு உள்ள கூட்டம். அவர்கள் 10 மாவட்டத்தில் காசு கொடுத்து கூட்டி வருகின்றனர். பெரியார் பெயரில் ஒரு அரசு நடந்து கொண்டிருக்கிறது. எப்படி இவர்கள் வாலாட்டுகிறார்கள். வாலை சுருட்டி வைத்துக் கொள்ளுங்கள். நேருக்கு நேராக சவால் விடுகிறோம். கருத்தியல் ரீதியாக விவாதிக்க வாருங்கள். அதிமுகவிற்கு வேண்டுகோள் விடுகிறேன் பிஜேபி யோடு கூட்டணி வைக்காதீர்கள் வெளியே வாருங்கள். எம்ஜிஆர் மீது ஜெயலலிதா மீது மதிப்பு வைத்தது உண்மை என்றால் வெளியே வாருங்கள். வி சி கட்சி சமூக நீதியை உள் வாங்கிய கட்சி. அக்டோம்பர் 11 நாள் சமூகநீதியை பாதுகாக்க மனித அரணாக ஒன்றிணைய வேண்டும்” என்றார்.