அந்த கும்பலின் அக்மார்க் தயாரிப்பு தான் திருமாவளவன் - பாஜக கடும் தாக்கு

 
tn

ஆர். எஸ். எஸின் அக்மார்க் தயாரிப்பு தான் ஆர்.என்.ரவி என்று விமர்சித்திருக்கும்  திருமாவளவனுக்கு, நீதிக்கட்சி என்ற பெயரில் பொய்களை, திரிபுகளை, மோசடிகளை முன்வைத்த கும்பலின் அக்மார்க் தயாரிப்பு தான் திருமாவளவன் என்று பதிலடி கொடுத்திருக்கிறது பாஜக.

விந்திய மழையை அடிப்படையாக வைத்து தான் நார்த்தில் இருப்பவர்களை வட இந்தியர்கள்  என்றும், தென்பக்கம் இருப்பவர்களை திராவிடர்கள் என்று அடையாளப்படுத்தி இருக்கிறார்கள் ஆங்கிலேயர்கள்.   ஆங்கிலேயர்கள் தான் ’திராவிடன்’ என்ற வார்த்தையில் முதன் முதலில் குறிப்பிட்டார்கள் என்று சொன்ன தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் கருத்துக்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன. 

rn

திமுக தரப்பில் இருந்து தொடர்ந்து கண்டனக்குரல்கள் எழுந்து வரும் நிலையில்,  திமுகவின் கூட்டணி கட்சியினரும் தொடர்ந்து கண்டனக் குரல்களை எழுப்பி வருகின்றனர்.  விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன்,  ’’திராவிடன் என்பது மரபினம் அல்ல; நிலம் சார்ந்த ஒரு இனப்பிரிவு என்கிறார் ஆளுநர் ஆர்எஸ்எஸ் ரவி அவர்கள். இதுதான் திட்டமிட்ட அப்பட்டமான வரலாற்றுத் திரிபு.  திராவிடன் என்பது மொழிவழி தேசிய இனம் அல்ல. ஆனால் அது ஜீன் எனப்படும் குருதிவழி மரபினம் என்பது மானுடவியல் உண்மை.  திராவிடன் என்பது நிலம்வழி சார்ந்தது என்றால், ஆரியன் என்பதுவும் நிலவியல் சார்ந்த இனப்பிரிவு தானா? மரபினம் இல்லையா? ஆரியரான ஹிட்லரும் அதேபோல நிலம் சார்ந்த அடையாளத்தைக் கொண்டவர்தானா? ஆர். எஸ். எஸின் அக்மார்க் தயாரிப்பு தான் ஆர்.என்.ரவி என்பதைத் தொடர்ந்து உறுதிப்படுத்தி வருகிறார் ’’என்கிறார்.

இதற்கு பாஜக தமிழ்மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி,  ‘’திராவிடன், ஆரியன் என்பது மாயையே . திராவிடம் என்பது நிலப்பரப்பே. ஆனால், அரசியல் ஆதாயத்திற்காக ஒடுக்கப்பட்ட மக்களை படுகுழியில் தள்ளிய நீதிக்கட்சி என்ற பெயரில் பொய்களை, திரிபுகளை, மோசடிகளை முன்வைத்த கும்பலின் அக்மார்க் தயாரிப்பு தான் திருமாவளவன் என்பதை தொடர்ந்து உறுதிபடுத்தி வருகிறார்’’ என்கிறார்.

அவர் மேலும்,  ‘’ஒருங்கிணைந்த இந்தியர்களை பிளப்பதற்காக வெள்ளையர்களால் உருவாக்கப்பட்ட மோசடியே திராவிடர்கள், ஆரியர்கள் என்பது. சுதந்திர இந்தியாவில் தமிழை தாய் மொழியாக கொண்டிராத, தமிழரல்லாத ஒரு சிலரின் சதியே திராவிட இன அரசியல். திராவிடம் என்பது நிலப்பரப்பே. குருதிவழி மரபினம் என்பதே திரிபு’’என்கிறார் அழுத்தமாக.