இதனால்தான் என்னை ராமர் என்றும் சந்திரபாபு நாயுடு ராவணன் என்றும் விமர்சிக்கிறார்கள்-ஜெகன்மோகன்
ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தன்னை ராமர் என்று மக்கள் நினைக்கிறார்கள் எனவும் , சந்திரபாபு நாயுடுவை ராவணன் என்று மக்கள் நினைப்பதாக பேசி உள்ளார்.
ஆந்திர மாநிலத்தில் ஸ்ரீகாகுளம் பகுதியில் விவசாயிகளுக்கான நலத்திட்டங்களை தொடங்கி வைத்து பேசினார் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி. அப்போது, என். டி. ஆர். முதுகில் குத்தி சந்திரபாபு நாயுடு எப்படி ஆட்சியை கைப்பற்றினார் என்பது குறித்து பேசினார்.
தொடர்ந்து பேசியபோது, அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தல், நாடாளுமன்ற தேர்தலில் சந்திரபாபுவுக்கு பை பை சொல்லி விட்டு அவரை வீட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டும் . அந்த அரசியல் கொள்ளைக்காரருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கக் கூடாது என்றார்.
கடின உழைப்பு மூலம் அர்ப்பணிப்பு மூலம் தனித்து ஒரு கட்சியை ஆரம்பித்து ஆட்சிக்கு வந்தவர்களை எம்ஜிஆர், என்டிஆர், ஜெகன் என்பார்கள். மறுபுறம் துரோகம் செய்து ஆட்சிக்கு வருபவர்களை சந்திரபாபு என்று சொல்லுவார்கள். என்டிஆர் , எம்ஜிஆர் போல் நான் ஆட்சிக்கு வந்தவர். ஆனால் அவர்கள் சொந்த மாமா ராமாராவுக்கு துரோகம் செய்து ஆட்சியை கைப்பற்றினார். இதனால்தான் மக்கள் என்னை ராமர் என்றும் சந்திரபாபு நாயுடு ராவணன் என்றும் விமர்சிக்கிறார்கள். சந்திரபாபு நாயுடு தான் இன்றைய ராவணன் அவர் ஒரு அரசியல் கொள்ளைக்காரர் என்று கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.