அண்ணாமலையை தலைவராக போட்டு நம்ம உயிரை வாங்குறாங்க.. எரிச்சல்பட்ட பொன்முடி

 
po

அண்ணாமலைக்கு அரசியலும் தெரியல வரலாறும் தெரியல.  அப்படிப்பட்டவரை தலைவராக போட்டு நம்ம உயிரை வாங்குகிறார்கள் என்று எரிச்சல் பட்டார் அமைச்சர் பொன்முடி.

 சென்னை கிழக்கு மாவட்ட திமுக அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி சார்பில் திமுக முப்பெரும் விழா நடந்தது.   இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சேகர் பாபு,  பொன்முடி டி. ஆர். பாலு எம்பி, நாஞ்சில் சம்பத் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

am

 அமைச்சர் பொன்முடி பேசிய போது , திமுக தலைவர் ஸ்டாலின் மிஷா வழக்கில் சிறை சென்றார் என்பது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரைக்கும் அனைவருக்கும் தெரிந்த ஒன்று.   துக்ளக் ஆசிரியரே இதை ஒப்புக் கொண்டிருக்கிறார்.   ஆனால் அண்ணாமலைக்கு அரசியலும் தெரியவில்லை வரலாறு தெரியவில்லை.   அப்படிப்பட்டவரை தலைவராக போட்டு நம்ம உயிரை வாங்குகின்றார்கள் என்றார்.

 இது குறித்து மேலும் பேசிய பொன்முடி ,  கடவுள் பெயரால் மதத்தின் பெயரால் பிரிவினைகள் ஏற்படுத்தக் கூடாது என்பதை தான் பெரியார்  வலியுறுத்தினார்.  ஒரு காலத்தில் கோயில் இருக்கும் தெருக்களில் , உயர்ந்த சாதி மக்கள் இருக்கும் தெருக்களில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் நடந்து செல்ல முடியாது.  அப்படி ஒரு சம்பவம் எங்காவது தற்போது நடக்க முடியுமா?   இவை அனைத்தும் பெரியார் போட்ட பிச்சை என்பதை யாராலும் மறுக்க முடியாது என்றார்.