இந்த கதாபாத்திரங்கள் கற்பனையே! யாரையாவது நினைத்துக் கொண்டால் நிர்வாகம் பொறுப்பல்ல! - பாஜக

 
u

உதயநிதி ஸ்டாலின் நாளை அமைச்சராகிறார்.   நாளை காலையில் 9:30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலில் பதவியேற்பு விழா நடைபெறுகிறது.  ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். இதுகுறித்து தமிழக பாஜக துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள ஒரு பதிவு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

uu

துக்ளக் பத்திரிகையின் ஒன்றரைப் பக்க நாளேடு இன்று இருந்திருந்நால் கீழ்க்கண்ட உரையாடல் வெளியாகி இருக்குமோ?
தந்தை: மகனே, நாளை உனக்கு முடிசூட்டு விழா.
மகன்: என்ன!!! முடிசூட்டு விழாவா?
தந்தை: ஆம். நாளை நீ அமைச்சர் ஆகிறாய்.
மகன்: முடிசூட்டுவது யார்? நீங்கள் தானே?
தந்தை : ஆட்டுக்கு தாடியும் நாட்டுக்கு  .......ம் தேவையில்லை என்று சொன்னோமோ அவர் தான் முடிசூட்டுகிறார்.
மகன்: அவர் அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்படுகிறார் என்று சொன்னோமே?
அப்போது இதுவும் அப்படித் தானா?
தந்தை: அது அப்போது,
இது இப்போது.

மகன்: பொது மக்கள் இதை எப்படி எடுத்துக் கொள்வார்கள்.
தந்தை: அன்று சொன்னது பொது மக்களுக்கு.
இன்று செய்வது என் மக்களுக்கு.
மகன்: மாநில நலன்களுக்கு எதிராக செயல்படுகிறார் என்று சொன்னோமே?
தந்தை: அதைத் தானே இப்போதும் செய்யப்போகிறார்.

மகன் : மக்கள் நம்மை தமிழின துரோகிகள் என்று சொல்லமாட்டார்களா?
தந்தை: நாம் தமிழர்கள் என்று யார் சொன்னது?
நாம் "திராவிடர்கள்"

மகன்: சனாதனத்தை நுழைக்கிறார் என்று விமர்சித்தோமே?
தந்தை: சனாதனம் என்றால் முடிவில்லாதது என்று பொருள். வாரிசு அரசியலும் திமுகவை பொருத்தவரை முடிவில்லாததே.
மகன்: இது தான் தமிழக அரசியலா?
தந்தை : இல்லை! இது தான் 'திராவிட மாடல்' அரசியல்.
(குறிப்பு : மேலே உள்ள கதா பாத்திரங்கள் கற்பனையே. யாரையாவது நினைத்துக் கொண்டால் நிர்வாகம் பொறுப்பல்ல.)