’’பாஜக ஆலோசனையைக் கேட்டு அதிமுகவை நடத்தவேண்டிய அவசியம் இல்லை’’
பாஜகவின் ஆலோசனையை கேட்டு கட்சியை வழிநடத்த வேண்டிய அவசியம் எடப்பாடி பழனிச்சாமிக்கு இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் எஸ். பி. வேலுமணி.
திமுக அரசின் செயலை கண்டித்து பொள்ளாச்சியில் நடந்த போராட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணி பேசியபோது, டெல்லியில் பிரதமர் ஏற்பாடு செய்த குடியரசுத் தலைவரின் பிரிவு விபச்சார விழாவுக்கு தமிழகத்தில் இருந்து அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது என்று சொன்னவர், அதிமுக கட்சி விவகாரத்தில் பாஜக தலையிடாது என்று தமிழக பாஜகவின் தலைவர் அண்ணாமலை சொல்லி இருக்கிறார்.
அதிமுக அதிமுகவை எப்படி நடத்த வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமிக்கு நன்றாகவே தெரியும். பாஜகவினர் அவர்கள் கட்சியை பார்த்துக் கொள்வார்கள். அதனால் யாரின் ஆலோசனையை கேட்கும் கட்சியை வழிநடத்த வேண்டிய அவசியம் எடப்பாடி பழனிச்சாமிக்கு இல்லை என்று திட்ட வட்டமாக தெரிவித்துள்ளார்.
ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இருவரும் இணைய வேண்டும். அவர்கள் இணைந்து இருந்தால்தான் தேர்தலில் வாக்குகள் சிந்தாமல் அதிமுகவுக்கு சேரும். இல்லையேல் வாக்குகள் பிரிந்து விடும். அது பாஜகவுக்கு பாதகமாக முடிந்துவிடும். அதனால் ஒருங்கிணைந்த அதிமுகவை தான் பாஜக மேலிடம் விரும்புகிறது. இதுகுறித்து பாஜக தலைவர்களும் அறிவுறுத்தி வருகிறார்கள்என்ற பேச்சு இருக்கும் நிலையில் எஸ்.பி வேலுமணியின் இந்த பேச்சு பாஜகவிலும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.