அது சபரீசன் அல்ல; அது துபாயும் அல்ல; அமெரிக்காவில் ஒரு திமுக பிரமுகரை சந்தித்து பேசிய ஆதாரம் இருக்குது - காயத்ரிக்கு பதிலடி

 
க்

திமுகவும் பாஜகவும் எலியும் பூனையுமாக எப்போதும் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறது.  இந்த சூழலில் தமிழக பாஜகவின் முக்கிய பொறுப்பில் இருந்த காயத்ரி ரகுராம்,  முதல்வர் ஸ்டாலின் மருமகன் சபரீசன் உடன் சென்னை சோமர்செட் ஓட்டலில் ஒன்றரை மணி நேரம் சந்தித்து பேசி இருக்கிறார் என்று தமிழக பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி குற்றம் சாட்டி இருந்தார்.

அக்

 இதற்கு மறுப்பு தெரிவித்த காயத்ரி ரகுராம்,  ஒன்றரை மணி நேரம் தான் பேசவில்லை.  ஹலோ ஹாய் மட்டும் தான் சொன்னேன் என்று விளக்கம் அளித்து இருந்தார். ஆனாலும் ஹலோ ஹாய் மட்டும் சொல்லவில்லை . ஒன்றரை மணி நேரம் பேசியது உண்மை என்று அடுத்தடுத்து பாஜகவினர் கூறிவந்தனர்.

 இந்த நிலையில்,  சென்னையில் சோமர்செட் ஓட்டலில் மட்டுமல்லாது துபாயில் ஒரு ஓட்டலிலும் சபரீசனை காயத்ரி ரகுராம் சந்தித்து பேசியதாக அண்ணாமலை கூறியிருக்கிறார் என்று காயத்ரி ரகுராம்  கொதித்து எழுந்திருக்கிறார். 

’’முதலில் அவர்கள்,  சென்னை சோமர்செட் ஹோட்டலில் சபரீசனுடன் சந்தித்ததாக என்னை மோசமான முறையில் குறிவைத்தனர்.   இப்போது துபாயில் ஒரு திமுக பிரமுகரை சந்தித்ததாக மக்கள் என்னிடம் கேட்கிறார்கள். நான் துபாய் ஹோட்டலில் யாரை சந்தித்தேன்? இதற்கு  அண்ணாமலை பதிலளிக்க வேண்டும்?அதுவரைக்கும் நான் அமைதியாக இருக்கப் போகிறேன்’’என்கிறார். 

ட்

உடனே,  அண்ணாமலையா அப்படிச் சொன்னார் என்று பாஜகவினர் கேள்வி எழுப்ப,  ‘’அண்ணாமலை என் பெயரைக் குறிப்பிடவில்லை என்று  நினைக்கிறார்கள். சுமார் 150 பேர் இருந்த கூட்டத்தில் எனது பெயரைக் குறிப்பிட்டார். அண்ணாமலை ஏன் அப்படிச் சொன்னார், எந்த அடிப்படையில் சொன்னார் என்று நான் கேள்வி கேட்கவில்லை. மக்களுக்கு என் சார்பாக பதில் அளிக்குமாறு எனது மாநிலத் தலைவரிடம் கேட்டுக் கொள்கிறேன்’’என்கிறார் காயத்ரி.

க்

காயத்ரியின் இந்த கேள்விக்கு பாஜகவினர் பதிலடி கொடுத்து வருகின்றனர்.  துபாய் இல்ல ..அமெரிக்கா.  அங்கு சந்திப்பு நடந்ததற்கான ஆதாரம் இருக்கு. ஆனால் சந்திப்பு நடந்தது சபரீசன் உடன் அல்ல அது ஒரு திமுக பிரமுகர் என்கிறார்கள்.  மேலும், எதிர்கட்சியில் உள்ள ஒவ்வொருத்தரையா சந்தித்து பேசி வருவதை கண்டுபிடித்து சொல்வதுதான் அண்ணாமலையின் வேலையா? என்று கடுப்பாகின்றார்கள்.