தெனாவட்டா பேசும் அமைச்சர்.. நமக்கே கோபம் வருது.. திமுகவினர் ஆவேசம்

 
kன்

அண்மைக்காலமாக திமுக அமைச்சர்களும், எம்பிக்களும் எதையாவது பேசி சர்ச்சையை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். திமுகவினரே இதை விரும்பாமல் உள்ளார்கள். முதல்வரும் கூட இதை கண்டித்திருக்கிறார்.

இந்த நிலையில், ராமநாதபுரத்தை சேர்ந்த திமுக பிரமுகர் ஜெயராமன் இதுகுறித்து தனது கருத்தினை தெரிவித்திருக்கிறார்.  அதற்கு,  திமுகவில் இருந்து விலகிய சுப்புலட்சுமி ஜெகதீசனின் கணவர் ஜெகதீசன் பதில்  பதிவு போட்டிருக்கிறார்.

ஒ

ஜெயராமன் தனது பதிவில்,  தேவையில்லாமல் கோபப்படுவதும், எகத்தாளமாக பேசி ஊடகங்களுக்கு அவல் அள்ளி போடுவதும் போடுவதும் நம்மில் சிலருக்கு வேலையாக போய்விட்டது. அதில் முதலாவதாக, தலைமை நிலைய முதன்மை செயலாளர் நேரு அவர்கள் சமீப காலங்களாக மக்கள் மத்தியில்  தெனாவெட்டாக பேசுவது கூடுகிறது.

ஊரக உள்ளாட்சி துறையையும் சேர்த்து தரவில்லையே என்ற கோபமா? கோபப்படுவது போல் காட்டினால் சிலர் பயப்படுவார்கள் என்ற தந்திரமா? திருச்சியில் மகேஷை முன்னிருத்துவதால் வரும் கோபமா? ஒன்றிய,நகர,பேரூர் கழக அமைப்பு தேர்தலில் தன்னை முன்னிருத்தவில்லையே என்ற மனவருத்தமா?
கட்சியினர் மத்தியில் மிக மோசமான வார்த்தைகள்,கட்சியினர் மனம் புண்படும்படி வார்த்தை பிரயோகம்  செய்வது இவர் தொடர் வழக்கம்.

கோபப்படுவது போல் காட்டினால் பயந்து விடுவார்கள் என்பது அவரது டெக்னிக்காக இருக்கலாம்.எல்லோரும் பயப்படுவார்கள் என்று நினைப்பது சிறு பிள்ளை தனம்.
அடுத்து அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி: இடை இடையே பேட்டி கொடுத்து எதையாவது சர்ச்சையை தெளித்து விட்டு சென்றுவிடுவார்.

ர்ச்

மூன்றாவதாக பொன்முடி.. முனைவராக இருந்தவர் இதுவரை இல்லாத அளவுக்கு சில வார்த்தைகள் அவர் பேசும் போது  நமக்கே கோபம் வரும்போது பொது மக்களுக்கு?முனைவருக்கு யார் மீதாவது உள்ள கோபத்தை பொதுவெளியில் காட்டுகிறாரா?

கடைசியாக ஆ.ராசா: சிறந்த பேச்சுத் திறமை உள்ள ஆ.ராசா அவர்கள்.  தற்போது நாம் இருக்கும் இயக்கம் வாக்கு வங்கியை நம்பி இருக்கும் இயக்கம்.நீங்கள் பயணிப்பது தி.கவில் அல்ல திமுகவில். தி.கவுக்கு எதை வேண்டுமானாலும் பேசலாம். ஆட்சியில் இருந்தால் பொதுமக்களுக்கு நன்மை செய்ய முடியும்.அப்படி ஆட்சிக்கு வரவேண்டும் என்றால் வாக்குகள்  அவசியம்.  இராமர் சிலையை உடைத்து நடந்த தேர்தலில் மாபெரும் வெற்றியை பெற்றது திமுக.அந்த சூழல் அல்ல இப்போது.தமிழக மக்கள் மாறவில்லை ஆனால் ஆட்சியில் இருப்பது ஆர்எஸ்எஸ்.  உங்கள் நீலகிரி சுற்றுப்பயணம் இருமுறை தள்ளி வைக்கப்பட்டது.தேவையில்லாத  சர்ச்சைகளை உருவாக்க நினைக்கும் சங்கிகளின் சதித்திட்டத்தை முறியடிக்க காவல் துறை தந்த அறிவுரை இது. 

ர்

நாம் பேசுவதற்கு அரசியலில் ஆயிரம் விஷயங்கள் இருக்கிறது. எடப்பாடி அம்மாவை பற்றி நீங்கள் சொன்னதாக ஊடகங்களில்  பரப்பப்பட்டு,அதற்கு கண்ணீருடன் எடப்பாடி நாடகமாட கொங்கு பகுதியில் நம் வாக்குகள் குறைய அதுவும் காரணமாயிற்று. எதிர் கட்சியாக நாம் பேசுவதற்கும்,ஆளுங்கட்சியாக நாம் இருந்து கொண்டு பேசுவதற்கும் வித்தியாசம் உண்டு. மனுசாஸ்திரத்தில் உள்ளதை சொன்னதற்கு இந்துக்களான நம் அம்மாவை கேவலப்படுத்துகிறார் ராசா என்று பொய் பிரச்சாரம் பரப்பப்படுகிறது‌. ஆ.ராசா அவர்கள் சிறிது கவனமாக இருக்க வேண்டும் என்பது கொள்கை வழியில் நடக்கும் உங்களிடம் ஒரு வேண்டுகோள்.  தலைவரே தனது அறிக்கையில் இதை குறிப்பிட்ட படியால் நமது கருத்தை முன் வைத்தோம்’’என்று பதிவிட்டிருக்கிறார்.

 இதற்கு ஜெகதீசன்,   ’’ஆ. ராசா ;  சொல்லித்தெரிய வேண்டியது இல்லை . தனிப்பட்ட முறையில் நான் அன்பு பாராட்டுபவன் . பணம் , பதவி ஓகே.  அதனால் பேச்சும் , ஏச்சும் அதிகமே ! அண்ணா நகர்த் தொகுதியில் டாக்டர் எழிலனின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் எடப்பாடியின் தாயாரைக் குறிப்பிட்டுப்பேசியது கொங்குமண்டலத்தில் பெரும் சரிவை தாய்மார்கள் மத்தியில் ஏற்படுத்தியது . மொடக்குறிச்சியில் அந்தப் பேச்சை பிஜேபி வலிமையான ஆயுதமாகப் பயன்படுத்திக் கொண்டது . ஜெயரஞ்சன் கூட்டங்களின் போது இதன் தாக்கத்தை உணர்ந்தோம் .

ஜ்

கொங்கு மண்டலத்தின் கிராம பகுதித்தொகுதிகளில் 25000, 30000 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக தோற்கடிக்கப்பட்டது .  கிராமங்கள் மட்டுமே உள்ள மொடக்குறிச்சியில் திமுக பெற்ற வாக்குகள் அம்மையின் உழைப்புக்குக் கிடைத்த அங்கீகாரம் என்பதை மறந்து என்னென்னவோ பிரச்சாரம் செய்யப்படுகிறது சந்திப்போம் ; சமாளிப்போம் . நேர்மை வெற்றி பெறாமலா போகும் ?’’ என்கிறார்.