ஓபிஎஸ் போலீஸ் உதவியால் தப்பினார் - புகழேந்தி

 
pp

 ஓ. பன்னீர் செல்வத்தை தாக்குவதற்காக திட்டம் தீட்டி இருந்தார்கள்.  போலீசின் உதவியால் பத்திரமாக வெளியே வந்து விட்டார் என்று சொல்லி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார் அதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி.

 இதுகுறித்து அவர் கோவையில் செய்தியாளர்களிடம் பேசியபோது,   எடப்பாடி பழனிச்சாமிகாக அனைத்தையும் விட்டுக்கொடுத்த ஓபிஎஸ்-க்கு ஒருநாள் செக் வைப்பார்கள் என்று ஒரு வருடத்திற்கு முன்பே சொன்னேன்.   அதன்படியே பொதுக்குழு என்ற பெயரில் அக்கிரமம் நடத்தியிருக்கிறார்கள்.   டிசம்பர் 1ஆம் தேதி செயற்குழுவின் அதிகாரத்தை பயன்படுத்தி தேர்வு செய்திருந்த ஒருங்கிணைப்பாளர்,  இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர்தான் சிவி சண்முகம் , தருமர் ஆகியோரை நாடாளுமன்ற உறுப்பினர் ஆக்கி இருக்கிறார்கள்.   அப்படி ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் பதவி இல்லை என்றால் சிவி சண்முகத்திற்கு வழங்கப்பட்ட பதவியும் இருக்காது.   இதற்காகவே நீதிமன்றம் செல்வோம் என்று தெரிவித்தார்.

p

 நீதிமன்றத்தை அவமானப்படுத்திவிட்டார்கள்.  நீதிபதி கொடுத்த தீர்ப்பை தூக்கி எறிந்திருக்கிறார்கள்.   ஓபிஎஸ்  மீது தாக்குதல் நடத்த திட்டம் தீட்டி இருந்திருக்கிறார்கள்.   போலீசார் கவனமாக இருந்ததால் தான் ஓபிஎஸ் அவரது ஆதரவாளர்களும் தப்பித்து இருக்கிறார்கள்.  எல்லாமே எடப்பாடி பழனிச்சாமி சொல்லித்தான் நடந்திருக்கின்றன.

 இருபத்தி மூன்று தீர்மாங்களும் நிராகரிக்கப்படுகிறது என்று சொன்னால் எதற்காக 10 நாட்களாக உட்கார்ந்து அதிமுக நிர்வாகிகள் 23 திருமணங்களை தேர்வு செய்தார்கள்? எதற்காக சிவி சண்முகத்திற்கு அதிமுகவில் இருப்பவர்கள் பயப்படுகிறார்கள்?  எம்ஜிஆர் கொண்டு வந்த பைலாவில் கைவைத்ததால்தான் இன்றைக்கு ரோடு ரோடாக அலைந்து கொண்டிருக்கிறார்கள் என்று கடுமையாக சாடினார்.

pg

11 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்டு வந்து எடப்பாடியை முதல்வராக அமர வைத்ததற்காக அவர் மீது தாக்குதல் நடத்துகிறாரா எடப்பாடி பழனிச்சாமி? விடிய விடிய பேச்சுவார்த்தை நடத்தி முதல்வர் வேட்பாளர் பழனிச்சாமி என்று அறிவித்தாரே. அதற்காகத்தான் அவருக்கு அடியா?  என்று கேள்வி எழுப்பி இருக்கும் புகழேந்தி,  வரும் 11ம் தேதி பொதுக்குழு கூடாது என்று அழுத்தாமக சொன்னார்.