மூவர் அணியின் திரைமறைவு மூவ்

 
sa

 சசிகலா ஓபிஎஸ்ஐ அடுத்து டிடிவி தினகரன் வெளிப்படையாகவே எடப்பாடி பழனிச்சாமி உடன் இணைந்து செயல்பட முடிவெடுத்து அறிவித்திருக்கிறார்.  இதற்கும் எடப்பாடி பழனிச்சாமி ஒத்துப் போகவில்லை என்றால் சசிகலா- தினகரன் -ஓபிஎஸ் மூவரணி திரை மறைவில் எடப்பாடிக்கு அதிர்ச்சியை கொடுக்க இருக்கிறது என்கிறார்கள்.

 அதிமுக பொதுக்குழு செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்ததை  அடுத்து பிரிந்தவர்கள் எல்லோரும் ஒன்று பட்டு செயல்படுவோம் என்று அழைப்பு விடுத்து பார்த்தார் ஓபிஎஸ் .  எடப்பாடி பழனிச்சாமிக்கு மட்டும்தான் இந்த அழைப்பா?  சசிகலா டிடிவி தினகரனுக்குமா? என்ற கேள்விக்கு,  எல்லோருக்கும் சேர்த்துதான் என்று தெரிவித்திருந்தார் ஓபிஎஸ்.

e

ஆனால் சசிகலா, டிடிவி தினகரன், ஓபிஎஸ் உடன் இணைய கூடாது என்பதில் பிடிவாதமாக இருக்கிறார் எடப்பாடி.    நீதிமன்றத்தில் வாக்குவாதத்தின் போது கூட ஓபிஎஸ் உடன் இனி இணைவதற்கு வாய்ப்பே இல்லை என்று  தெரிவித்திருக்கிறது எடப்பாடி தரப்பு.  

 சசிகலாவும் யார் மீதும் தனக்கு எந்த அதிருப்தியும் இல்லை.  எல்லோரும் ஒன்று பட்டு செயல்பட வேண்டும் என்று சூசகமாக சொல்லி வந்தார். இதற்கும் எடப்பாடி  இசையாமல் இருப்பதால் டிடிவி தினகரன் தன் பங்கிற்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.   தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் பேசிய போது,   அதிமுகவில் உள்ள சில துரோகிகள் துரோக சிந்தனை உள்ளவர்கள் திருந்தினால் தான் பன்னீர்செல்வம், வைத்திலிங்கம் ஆகியோர்  எண்ணங்கள் நிறைவேறும் என்றார்.

 அவர் மேலும்,  யாருடனும் எங்களுக்கு அரசியல் ரீதியான எந்த கருத்து வேறுபாடும் கிடையாது.   எடப்பாடி பழனிச்சாமி இடம் கூட எனக்கு தனிப்பட்ட கருத்து வேறுபாடு எல்லாம் கிடையாது.   அவருடைய  குணாதிசயத்தை தான் நான் கண்டிக்கிறேன் .  தவிர,  மற்றபடி  அவருடன் எந்த தனிப்பட்ட விரோதமும் கிடையாது என்றார்.

எடப்பாடியுடன் தனக்கு தனிப்பட்ட கருத்து வேறுபாடு இல்லை என்று டிடிவி தினகரன் பேசியது எடப்பாடி பழனிச்சாமிக்கு அவர் விடுத்துள்ள நேரடி அழைப்பாக பார்க்கப்படுகிறது.  இதற்கும் எடப்பாடி கொஞ்சம் கூட இறங்கி வராமல் இருந்தால் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து திரை மறைவில் செயல்பட்டு வரும் சசிகலா- ஓபிஎஸ்-  டிடிவி தினகரன்  மூவர் அணி முடிவு எடுக்கும் என்கிறது அதிமுக வட்டாரம்.