ஓபிஎஸ்சின் திடீர் என்ட்ரி - தெறித்து ஓடிய எடப்பாடி டீம்

 
ச்ப்

ஓபிஎஸ் வருகிறார் என்ற தகவல் வந்ததும் முதலில் அங்கிருந்து எஸ்கேப் ஆகியிருக்கிறார் சி.வி.சண்முகம்.  மற்ற சீனியர்களும் அவசர அவசரமாக ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்துவிட்டு அங்கிருந்த் புறப்பட்டுச் சென்றிருக்கிறார்கள்.

 வரும் 23 ஆம் தேதி அன்று அதிமுக பொதுக்குழு கூட இருக்கும் நிலையில் அது தொடர்பாக ஆலோசித்து முடிவு எடுக்க கடந்த 14ஆம் தேதியன்று அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடந்தது.  அந்த கூட்டத்தில் பொதுக்குழுவை எப்படி நடத்த வேண்டும் என்பதற்கு பதிலாக , அதிமுகவுக்கு ஒற்றை தலைமையைக் கொண்டு வர வேண்டும் என்று பலரும் பேச,  அந்த கூட்டம் திருப்தி  இல்லாமல் முடிந்திருக்கிறது. 

பொ

 இதை அடுத்து பன்னீர்செல்வமும் பழனிச்சாமியும் அடுத்து என்ன செய்யலாம் என்பது குறித்து தங்களது ஆதரவாளர்களுடன் தனித்தனியாக அவர்கள் இல்லத்தில் பேசி வருகின்றனர்.

கடந்த ஆண்டு செயற்குழுவில் எடுத்த  தீர்மானத்தின்படி ஒற்றைத் தலைமையை முடிவெடுக்கும் அதிகாரம் பொதுக் குழுவிற்கு இல்லை என்றும், அப்படி பொதுக்குழுவில் ஒற்றை தலைமை விவகாரத்தை முன்னெடுத்தால் செயற்குழுவின் தீர்மானத்தை மீறிய செயலுக்காக என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்று பன்னீர்செல்வமும் அவரது ஆதரவாளர்களும்  பன்னீர்செல்வத்தின் இல்லத்தில் ஆலோசனையில் ஈடுபட்டிருக்க,  எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்கள் திமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் தினமும்  பொதுக்குழுவை எப்படி நடத்த வேண்டும்.  அதில் ஒற்றை தலைமையை கொண்டு வர என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஆலோசித்து வருகின்றனர்.

i

 இன்றைக்கும் அந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்று இருக்கிறது .   அப்போது அந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க திடீரென்று ஓபிஎஸ் வர இருப்பதாக தகவல் தெரிய வந்திருக்கிறது.   உடனே எடப்பாடி பழனிச்சாமியின் தீவிர ஆதரவாளரான சி.வி. சண்முகம் தலைமை அலுவலகத்தில் இருந்து திடீரென்று ஆலோசனைக் கூட்டத்தை பாதியில் நிறுத்திவிட்டு புறப்பட்டுச் சென்றிருக்கிறார்.   அதன் பின்னர் அதிமுகவிம் சீனியர்கள் பலரும் ஆலோசனை கூட்டத்தை அவசர அவசரமாக முடித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றிருக்கிறார்கள்.

ஓபிஎஸ் வருகிறார் என்று சொன்னதும் எடப்பாடி டீம் தெறித்து ஓடியது அதிமுக தலைமை அலுவலகத்தில் பரபரப்பையும் சலசலப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.