போன் போட்ட ஓபிஎஸ் மகன் - ஆதங்கத்தை கொட்டிய எடப்பாடி

 
o

 ஒற்றைத் தலைமை என்பதில் உறுதியாக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி , இரட்டை தலைமையில்  இயங்கலாம் என்ற ஓபிஎஸ் அழைப்பை நிராகரித்திருக்கிறார்.  எடப்பாடி ஒத்து வராததால் வேறு வழி இன்றி பொதுக்குழுவை கூட்ட முடிவெடுத்து இருக்கிறார் ஓபிஎஸ் . இந்த பொதுக் குழுவிற்கு எடப்பாடிக்கும் அழைப்பு விடுக்க முடிவு எடுத்து இருக்கிறார்.   பொதுக்குழுவை கூட்ட நீதிமன்ற அறிவுரைப்படி ஆணையரை கோருவது தொடர்பாக அவர் ஆலோசனை நடத்தி வருகிறார்.

நீதிமன்றத்தின் உத்தரவுப்படி இடைக்கால பொதுச்செயலாளர், புதிதாக நியமிக்கப்பட்ட அவை தலைவர், பொருளாளர் உள்ளிட்ட பதவிகள் செல்லாததாகி விட்டன. அதனால் இந்த தீர்ப்பை எடுத்து கூட்டு தலைமையோடு மீண்டும் ஒன்று கூடுவோம் கட்சி நடத்துவோம் என்று ஓபிஎஸ் விடுத்து அழைப்பை நிராகரித்திருக்கிறார் எடப்பாடி.  

vo

 இதை அடுத்து ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் , எடப்பாடி ஆதரவாளர்கள் எஸ்பி வேலுமணி , தங்கவேலு தங்கமணி ஆகியோரை தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்.  நமக்குள் எந்த பிரச்சினையும் வேண்டாம்.  கட்சி நிர்வாகிகளாக இரு தரப்பிலும் பாதி பேரை நியமித்தால் போதும்.  பிரச்சனை வளர்க்க வேண்டாம். வாங்க பேசலாம் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.  ஆனால் வைத்திலிங்கத்தின் இந்த சமரச உடன்பாட்டை எடப்பாடி தரப்பு ஏற்கவில்லை. 

கூட்டுத்தலைமை பாதிப்பாதி  நிர்வாகிகள் என்கிற நிபந்தனையை கைவிட்டு விட்டு வந்தால் யோசிக்கலாம் என்று கண்டிப்பாக கூறி இருக்கிறார்கள்.  வைத்திலிங்கத்தின் முயற்சி தோல்வியடைந்ததால் ஓபிஎஸ் மகன் நேரடியாக எடப்பாடி பழனிச்சாமிக்கு போன் போட்டு இருக்கிறார்.   மூன்று முறை அவர் தொடர்பு கொண்டும்  எடப்பாடி பழனிச்சாமி போனை எடுக்கவே இல்லையாம்.   ஆனால் தனது ஆதரவாளர்களிடம்,    இப்போது நாம் எடுத்திருக்க முடிவுகள் நிர்வாகிகள் எடுத்த முடிவு.  இந்த முடிவை எப்படி மாற்ற முடியும்.  அந்த பிள்ளைகளிடம் நான் பேசுவதற்கு என்ன இருக்கிறது? என்று ஆதங்கத்தை கொட்டி இருக்கிறார்.

 30 நாட்களுக்குள் ஒருங்கிணைப்பாளரும் ,இணை ஒருங்கிணைப்பாளரும் இணைந்து பொதுக்குழுவை கூட்ட வேண்டும் . இதில் ஏதும் பிரச்சனை ஏற்பட்டால் ஒரு ஆணையரை நியமிக்க நீதிமன்றத்தை நாடலாம் என்று தீர்ப்பளிக்கப்பட்டு இருப்பதால்,  பொதுக்குழுவை கூட்ட ஓபிஎஸ் முடிவு எடுத்திருக்கிறார்.   பொதுக்குழுவுக்கு எடப்பாடி பழனிச்சாமிக்கும் அழைப்பு அனுப்ப திட்டமிட்டு உள்ளார்.   நீதிமன்ற அறிவுரைப்படி ஆணையரை கோருவது தொடர்பாக ஓபிஎஸ் ஆலோசித்து வருகிறார்.