பிரிந்தவர்கள் இணைகிறார்கள்! அதிமுகவுடன் இணையும் அ.தி.க. -தொண்டர்கள் குழப்பம்

 
அட்

பிரிந்தவர்கள் வரும் 12ஆம் தேதி அன்று இணைகிறார்கள்.  இதனால்  அதிமுகவுடன் இணைகிறது அ.தி.க.   என்ற பரபரப்பு எழுந்திருக்கிறது. சசிகலாவுடன் திவாகரன் இ மீண்டும் இணைகிறார் என்று சொல்லும் போது சகோதரியுடன் சகோதரர் இணைகிறார் என்று எதார்த்தமாக போய்விடுகிறது.  ஆனால்,   அதிமுகவுடன் அ.தி.க. இணைகிறது என்று சொல்லும் போது அதிமுக தொண்டர்களிடையே குழப்பம் ஏற்பட்டிருக்கிறது.  இது சசிகலாவின் அதிமுக என்று வேறு சசிகலா தரப்பினர் சொல்லி வருகின்றனர்.

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட தினகரன் அமமுக என்ற கட்சியை தொடங்கினார்.    அதிமுகவை கைப்பற்ற முயன்று தோல்வியடைந்த தினகரன் புதிய கட்சியை தொடங்கினார்.  அவர் அந்த கட்சியின் பொதுச் செயலாளர் ஆக பொறுப்பு வைத்து வருகிறார். அதே போல் சசிகலாவின் சகோதரர் திவாகரன் கடந்த 2018 ஆம் ஆண்டில் அதிமுகவிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட பின்னர் அண்ணா திராவிடர் கழகத்தை தொடங்கினார் .

டி

அதிமுகவில் முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி,  துணை முதலமைச்சர் ஆக இருந்த ஓ. பன்னீர்செல்வம் ஆகியோருக்கு ஆதரவாக திவாகரன் பேசி வந்ததால்.  இதற்கு சசிகலா கண்டனம் தெரிவித்தார்.   இதை அடுத்து அறிக்கைகளை அனுப்பி தன்னை  சசிகலா மிரட்டுவதாக திவாகரன் குற்றம் சாட்டினார். சசிகலாவை தனது சகோதரி என்று அழைக்க மாட்டேன் என்றும் சொல்லி வந்தார்.  சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்த சசிகலா,  பொது இடங்களில் தனது பெயரை உபயோகிக்க தடை விதிக்குமாறு திவாகரனுக்கு சட்ட அறிக்கை அனுப்பினார்.  இப்படி சசிகலாவுடன்  குடும்ப பிரச்சனைகள் இருந்த நிலையில் அதிமுகவில் இருந்து தகுவி நீக்கம் செய்யப்பட்டார் திவாகரன்.   இதை அடுத்து அவர் அண்ணா திராவிடர் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கினார்.

டி

 ஒட்டுமொத்த அதிமுகவுக்கும் தான் பொதுச்செயலாளர் என்று சொல்லி வருகிறார் சசிகலா.   அதனால் தான் சசிகலாவுடன் திவாகரன் இணையும் விழாவை அதிமுகவுடன் திவாகரன் இணைகிறார் என்கிறார்கள்.   நாளை அதிமுக பொதுக்குழு கூடுகிறது . இந்த பொதுக்குழுவில் எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளர் ஆகிறார்.   இந்த நிலையில் அதிமுகவின் பொது செயலாளர் நான் தான் என்று சொல்லிக் கொள்ளும் சசிகலாவுடன் அவரது சகோதரர் திவாகரன்  நாளை மறுதினம் 12ஆம் தேதி அன்று இணைகிறார் .  இந்த இணைப்பு விழா தஞ்சாவூரில் நடைபெறுகிறது

  இது குறித்து சசிகலா வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,  ‘’ சின்னம்மா அவர்களின் சீரிய தலைமையில் தாய் கழகமான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தோடு அண்ணா திராவிடர் கழகத்தை இணைக்கும் விழா வரும் 12ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 11:00 மணிக்கு தஞ்சாவூரில் அமைந்துள்ள தமிழரசி திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.   இந்த நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள் கழக முன்னோடிகள் கழகத் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்க வேண்டுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்’’என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.