அதே வானகரம் ...பொதுக்குழுவை கூட்டும் ஓபிஎஸ்

 
ஓப்ப்

எந்த வானகரத்தில் தன்னை அசிங்கப்படுத்தி அனுப்பினார்களோ அதே வானகரத்தில் பொதுக்குழுவை நடத்தி கெத்து காட்ட இருக்கிறார் ஓபிஎஸ்.

ஜெயலலிதா இருந்தபோது அதிமுகவில் முக்கிய தலையாக இருந்த ஓபிஎஸ் அவருக்கு பின்னரும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்று வானகரத்தில் நடந்த பொதுக்குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.   ஆனால் அடுத்து எடப்பாடி கூட்டிய பொதுக் குழுவில் ஓபிஎஸ்சை அசிங்கப்படுத்தி அனுப்பினார்கள் . அவரது ஒருங்கிணைப்பாளர் பதவியை, பொருளாளர் பதவியையும் பறித்து அவரை கட்சியை விட்டு நீக்கி விட்டேன் என்று அறிவித்து ஆரவாரம் செய்தார்கள் எடப்பாடியும் அவரது ஆதரவாளர்களும்.

எர்ர்

 ஆனால் பதிலுக்கு ஓபிஎஸ்சும் எடப்பாடியையும் அவரது ஆதரவாளர்களையும் அதிமுகவிலிருந்து நீக்கிவிட்டதாக அறிக்கை விட்டு வருகிறார்.  அதிமுகவில் அதிக மாவட்ட செயலாளர்கள் பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவாளர்களுடன் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி . அதனால் அவருக்குத்தான் அதிகாரம் இருக்கிறது.   சும்மா காமெடிக்காக ஓபிஎஸ் ,   நானும் நீக்குகிறேன் என்று செய்கிறார் என எடப்பாடி தரப்பினர் கிண்டல் செய்து வந்தனர்.   ஆனால் உண்மையிலேயே தற்போது எடப்பாடியின் பலம் குறைந்து விட்டதாகவும் ஓபிஎஸ் பலம் ஓங்கி வருவதாகவும் பேச்சு எழுந்திருக்கிறது.  எடப்பாடியின் டெல்லியில் பயணம் அதை உறுதிப்படுத்தி இருக்கிறது.  

ப்பொ

 இந்த நிலையில்தான் ஓபிஎஸ் புலிப்பாய்ச்சலை காட்டி வருகிறார்.   மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர் புதுத்தெம்புடன் வந்திருக்கிறார்.  விரைவில் அதிமுகவின் பொதுக்குழுவை கூட்டவும் அவர் ஏற்பாடுகள் செய்து வருகிறார்.   எந்த வானகரத்தில் தன்னை அசிங்கப்படுத்தினார்களோ அதே வானகரத்தில் பொதுக்குழுவை நடத்தி கெத்து காட்ட இருக்கிறார் ஓபிஎஸ் என்ற பேச்சு பரவுகிறது ஓபிஎஸ் வட்டாரத்தில்.

 ஓபிஎஸ் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த நேரத்தில் எடப்பாடி பழனிச்சாமி டெல்லிக்கு சென்றார்.   டெல்லிக்கு சென்ற எடப்பாடி பழனிச்சாமி அங்கே பாஜக மேலிட தலைவர்களை சந்திக்க முடிவு எடுத்திருந்தார்.  ஆனால் மேலிட தலைவர்கள் எடப்பாடியை சந்திக்க மறுத்துவிட்டதால் அதிருப்தியுடன் அவர் சென்னை திரும்பி இருக்கிறார்.   அதே நேரம் மருத்துவமனையில் படுத்துக் கொண்டே டெல்லியில் உள்ள மூத்த பாஜக பிரமுகர்களிடம் பேசியிருக்கிறார் ஓபிஎஸ் .  அப்போது,  அமித்ஷா சென்னை வந்த போது சசிகலாவையும் தினகரனையும் கட்சிக்குள் சேர்க்க வேண்டும்.  அப்படி சேர்க்கவில்லை என்றாலும் கூட பரவாயில்லை அவர்களை கூட்டணிக்குள்ளாவது சேர்த்துக் கொள்ள வேண்டும்.  அப்படி சேர்த்துக் கொண்டால் அதிமுகவின் வெற்றி உறுதி.   இல்லை என்றால் அது திமுகவுக்கு சாதகமாக போய்விடும் என்று சொன்னேன்.  

ச

 நான் சொன்னதை அமித்ஷா எடப்பாடியிடம் சொல்லியிருக்கிறார். ஆனால் அவரோ,   சசிகலாவுக்கும் தினகரனுக்கும் எந்த பலமும் இல்லை.  இரட்டை இலைக்குத் தான் உண்மையான பலம் இருக்கிறது .  அதிமுகவின் வெற்றி உறுதி என்று அமித்ஷாவிடம் பேசி அவரை சமாதானப்படுத்தி விட்டார் எடப்பாடி.   ஆனால் தேர்தல் முடிவுகள் என்ன ஆனது என்று எல்லோருக்கும் தெரியும்.   அதன் பின்னர்தான் நான் சொன்னதில் இருந்த உண்மையை அமித்ஷா புரிந்து கொண்டிருப்பார் என்று பேசியிருக்கிறார்.   தற்போதும் இப்படியே சென்றால் வரும் நாடாளுமன்ற தேர்தலை சந்திப்பதில் பெரும் பின்னடைவு ஏற்படும் என்று ஓபிஎஸ் எடுத்துச் சொல்ல டெல்லியில் இருந்து ஓபிஎஸ்-க்கு சில சிக்னல்கள் கிடைத்து இருக்கிறது.   

ட்

அதை வைத்து தான் இந்த புலிப்பாய்ச்சலை காட்டி வருகிறார் ஓபிஎஸ். அதிமுக வங்கி கணக்கு விவகாரத்தில் ரிசர்வ் வங்கிக்கு கடிதம் எழுதி இருக்கிறார்.   புதிதாக 14 மாவட்ட செயலாளர்களின் நியமித்து அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார்.  மேலும் ஜெயலலிதா காலத்திலேயே அதிமுகவில் உருவாக்கப்பட்டு பின்னர் அகற்றப்பட்ட தொகுதி செயலாளர்கள், ஊராட்சி செயலாளர்கள் பதவிகளை மீண்டும் உருவாக்குவதாக அறிவித்திருக்கிறார்.  இந்த அடுத்த அடுத்த அறிவிப்புகள் எல்லாம் பொதுக்குழுவை மையமாக வைத்தே  ஓபிஎஸ் காய்களை நகர்த்தி வருகிறார்.  

விரைவில் தன்னை அசிங்கப்படுத்தி அனுப்பிய அதே வானகரத்தில்  தனக்கு எந்த கட் அவுட்டும் வைக்காமல்,  போஸ்டர்களுமே இல்லாமல் எடப்பாடிக்கு மட்டும் எங்கு பார்த்தாலும் கட் அவுட்டுகளும் போஸ்டர்களும் வைத்து வெறுப்பேற்றிய அதே வானகரத்தில் அதிமுக பொதுக்குழுவை கூட்டுவதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்து வருகிறார் ஓபிஎஸ் என்கிறது அவரது வட்டாரம்.   அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்கிற முறையில் இந்த பொதுக்குழுவை அவர் கூட்டுகிறார் என்கிறார்கள்.