தீர்மானத்தில் ஒற்றை தலைமை குறித்து எதுவும் இல்லை - ஜேசிடி பிரபாகர்

 
j

அதிமுக பொதுக் குழுவிற்கு இன்னும் நான்கு தினங்களே இருக்கும் நிலையில் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து முடிவெடுக்க அதிமுக தலைமை அலுவலகமான சென்னை ராயப்பேட்டையில் உள்ள எம்ஜிஆர் மாளிகையில் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறது தீர்மானக்குழு.  

 நேற்று நடந்த ஆலோசனையில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ .பன்னீர்செல்வம் பங்கேற்றார்.  இன்றைக்கு நடந்த தீர்மான குழுவின் ஆலோசனைக் கூட்டத்திலும் ஓ. பன்னீர்செல்வம் பங்கேற்றார்.  ஆனால் எடப்பாடி பழனிச்சாமி இதுவரைக்கும் பங்கேற்கவில்லை.   இன்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், ப. வளர்மதி, திண்டுக்கல் சீனிவாசன், செம்மலை, வைத்திலிங்கம், சிவி சண்முகம் ,வைகைச்செல்வன் ,ஆர். பி. உதயகுமார், ஜேசிடி பிரபாகர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் .

r

இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக இந்த ஆலோசனை கூட்டம் நடந்து உள்ளது.   இந்த ஆலோசனை கூட்டத்தில் ஒற்றை தலைமை  குறித்து தீர்மானம் நிறைவேற்றக் கூடாது என்று கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் கூறியிருக்கிறார்.   ஒற்றை தலைமை என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் அவர் வலியுறுத்தி இருக்கிறார்.

 வைத்தியலிங்கம் அப்படி சொன்னதை அடுத்து,   நிர்வாகிகள் அதற்கு மேல் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்துள்ளனர்.  இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர் ஜேசிடி பிரபகர் செய்தியாளர்களிடம் பேசினார்.   அப்போது,  ’’பொதுக்குழு தீர்மானத்தில் ஒற்றை தலைமை குறித்து எதுவும் இல்லை. விவாதிக்கவும் இல்லை. ஒற்றைத்தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ் மிகுந்த வருத்தத்தில் இருக்கிறார் .  ஆனாலும் அவர் பொதுக்குழு தீர்மானங்கள் தொடர்பாக பன்னீர்செல்வம் ஆலோசனை வழங்கினார் என்று அவர் தெரிவித்துள்ளார்.