நான் கூப்பிட்டு வந்தவன் எல்லாம் அமைச்சராயிட்டான் - ஆர்.எஸ்.பாரதி பதவியில் இருந்து நீக்கப்படுவாரா?

 
n

வழக்கறிஞர்கள் பாதி பேருக்கு பதவி கிடைத்திருக்காது.  அதனால் ஆதங்கம் இருக்கும்.  ஆதங்கத்துடன் இருப்பது நியாயமும் கூட.  உழைத்தும் பலன் இல்லையே உழைக்காதவர்கள் வந்து பதவியில் உட்காரும்போது அந்த வேதனை இருக்கும் . அதனால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்களில் நானும் ஒருவன்.  

 நாங்க அழைச்சிட்டு வந்தவங்க எல்லாம் மந்திரியா ஆயிட்டான்.. எம்பி ஆயிட்டான்.. அது வேற விஷயம்.  ஆனால் எங்களுக்கு காலதாமதமாக வந்தது.  எனக்கு 68 வயதில் தான் எம்பி பதவி வந்துச்சு.   எங்களை எல்லாம் ஒதுக்கி விட்டார்கள் என்று ஆதங்கத்தில் இருப்பீர்கள் .  ஒதுக்குவார்கள் ..அப்படித்தான் இருக்கும் என்று பேசியிருக்கிறார் திமுக அமைப்பு செயலாளர்  ஆர்.எஸ்.பாரதி.


திமுக வழக்கறிஞர்களிடம் அவர் பேசிய வீடியோதான் வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.  அதில் மேலும்,  கட்சிக்கு உண்மையாக இருப்பவர்களை ஒதுக்கத்தான் செய்வார்கள்.    ஒரே கொடி,  ஒரே கட்சி,  ஒரே தலைவர் என்று காலம் காலமாக இருந்து விட்டதால் எனக்கு 63 வயதில் தான் எம்பி பதவி கிடைத்திருக்கிறது.  ஆனால் நான் கட்சிக்கு அழைத்து வந்தவர்கள் எல்லாம் எம். எல். ஏ , அமைச்சராகி விட்டார்கள்.  

 கட்சிக்கு விசுவாசகமாக இருந்தால் அவ்வளவு எளிதில் பதவி கிடைத்துவிடாது.   இதையெல்லாம் ஜீரணித்துக் கொண்டுதான் கட்சிக்குள் இருக்க வேண்டும். பொறுமையாக இருந்தால் என்றைக்காவது பதவி வந்துவிடும் என்று பேசியிருக்கிறார்.

இதற்கு நடிகையும் பாஜக பிரமுகருமான காயத்ரி ரகுராம்,  ’’என்ன ஆர்.எஸ். பாரதி சார் வெளிப்படையாக விமர்சித்து கருத்தும் கூறினீர்கள்.  உங்கள் திமுக கட்சிக்கு களங்கம் கொண்டு வரலாமா? உள் கட்சியின் பிரச்சினை சார். நீங்கள் வெளியே பேச முடியாது’’என்று கூறியிருக்கிறார். மேலும், பதவியில் இருந்து அவர் நீக்கப்படுவாரா? பொறுத்திருந்து பார்ப்போம் என்றும் கூறியிருக்கிறார்.