வாயிலும், வயிற்றிலும் அடித்துக்கொண்டு யார் கதறுகிறார்களோ அவர்களே அந்த புல்லுருவிகள்

 
ssm


 திமுக - பாஜக கூட்டணியா என்ற பேச்சு எழும் அளவிற்கு, கடந்த முறை  பிரதமர் மோடி- முதல்வர் ஸ்டாலின் சந்திப்பிற்கும் இந்த முறை இருவரின் சந்திப்பிற்கும் ஏகப்பட்ட வித்தியாசங்களை காண முடிந்தது. 

பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக கடந்த முறை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடந்த நிகழ்வில் பிரதமர் மோடி பங்கேற்ற மேடையில் முதல்வர் ஸ்டாலின் பேசிய பேச்சுக்கள் பாஜகவை ரொம்பவே சூடாக்கி விட்டன.   தமிழக அரசியலில் அது பூதாகரமாக வெடித்தது . தொடர்ந்து அது குறித்த சர்ச்சைகளும் விமர்சனங்களும் நீடித்து வந்தன. 

gf

 இந்தியாவிலேயே பிரதமரை மேடையில் வைத்துக் கொண்டு பேசிய ஒரே முதல்வர் ஸ்டாலின் மட்டுமே என்று அவரது மகன் உதயநிதி பெருமையாக சொன்னார். ஆனால் இது பாஜகவிற்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தி இருந்தது.   பிரதமரை வைத்துக்கொண்டு முதல்வரை இப்படி பேசலாமா என்று கேள்வி கேட்டனர்.  அந்த சர்ச்சைகள் எல்லாம் தற்போது ஓய்ந்திருந்த நிலையில் நேற்று அதே நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடந்த 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடியும் முதல்வர் மு. க. ஸ்டாலின் மிகவும் அன்னியோன்யமாக பேசிக் கொண்டார்கள் . 

அருகருகே உட்கார்ந்து சிரித்தபடியே பேசிக் கொண்டிருந்தார்கள்.  முதல்வர் ஏதோ ஒன்று சொல்ல அதைக் கேட்ட பிரதமர் செல்லமாக விரலை நீட்ட,  அவரது கையை பிடித்தபடியே சிரித்துக் கொண்டிருந்தார்  முதல்வர்.   சிறிது நேரம் முதல்வரின் தோளில் தட்டிக் கொடுத்து சிரித்தபடியே பேசிக் கொண்டிருந்தார் பிரதமர். நிகழ்ச்சியின் நடுநடுவே பிரதமரிடம் முதல்வர் விளக்கிச் சொன்னதையும் கண்டு பலரும் அதிசயித்தனார்.  

pi

 கடந்த முறை நடந்த நிகழ்வில் தர்ம சங்கடங்களும் வருத்தங்களும் இருந்தாலும் நேற்று நடந்த நிகழ்வு முதல்வர் நடந்து கொண்ட விதம் பாஜகவினருக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.   கடந்த முறை இருந்த இறுக்கம் எல்லாம் நேற்றைய மேடையில் காணாமல் போயிருந்தது.   இதனால் திமுகவுடன் பாஜக கூட்டணியா என்கிற அளவுக்கு பேச்சு எழுந்திருக்கிறது. 

ar

 இது குறித்து இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்,   ’’திமுகவில் ஊடுருவியிருக்கும் திராவிடர் கழக நக்சல், ஜிகாதி போராளி, கம்யூனிச பெருச்சாளிகள் இவர்களை எல்லாம் இப்பொழுது எளிதாக அடையாளம் காணலாம்! நேற்றைய நிகழ்ச்சிக்கு யார் வாயிலும், வயிற்றிலும் அடித்துக்கொண்டு கதறுகிறார்களோ அவர்களே மேற்கூறிய புல்லுருவிகள்’’என்கிறார்.