அமைச்சரால் என் உயிருக்கு ஆபத்து! சேகர்பாபுவின் கர்ப்பிணி மகள் வீடியோவில் கண்ணீர்

 
je

அமைச்சராக இருக்கும் தந்தை சேகர்பாபுவால் தனது உயிருக்கு ஆபத்து என்று சொல்லி  கர்ப்பினியாக இருக்கும் அவரது மகள் வெளியிட்டுள்ள வீடியோ வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. 

 இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி. கே. சேகர் பாபு.   இவரது மகள் ஜெயகல்யாணி.   சென்னை ஓட்டேரி பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் என்கிற வாலிபரை காதலித்து வந்துள்ளார்.   இந்த காதலுக்கு சேகர்பாபு கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.   இதனால் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டிருக்கிறார் ஜெயகல்யாணி . 

se

அமைச்சர் தரப்பில் சதீஷ்குமாரின் குடும்பத்தினர் மீது வழக்கு பதிவு செய்து வருவதாக குற்றச்சாட்டுகள் இருந்தன.  தனது விருப்பத்தின் பேரில் தான் திருமணம் செய்து கொண்டதாக கூறி இருந்த ஜெயகல்யாணி போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்று பெங்களூரு போலீசில்  பாதுகாப்பு கேட்டு மனு செய்திருந்தார். இந்த தம்பதிக்கு திருமணம் ஆகி 10 மாதங்கள் கடந்து இருக்கும் நிலையில் தற்போது ஜெயகல்யாணி கர்ப்பமாக உள்ளார்.  இதனால் தன் தந்தையால் தனது உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்று இந்த வீடியோவில் கூறியிருக்கிறார்.

 முதல்வர் ஸ்டாலின் தான் தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.   சதீஷ்குமாரை ஏழு வருடங்களாக காதலித்து வந்த ஜெய கல்யாணி 2021 ஆம் ஆண்டு காதல் விவகாரம் வெளியே தெரிந்ததை அடுத்து ஜெயகல்யாணியை அமெரிக்காவுக்கு அனுப்பி இருக்கிறார்கள்.  ஆனால் அமெரிக்காவிலிருந்து திரும்பி இந்தியா வந்த ஜெயகல்யாணி மீண்டும் சதீஷ் குமார் உடன் பழகி வந்திருக்கிறார் . 

j

இவர்கள் திருமணம் செய்து கொண்டு யாருக்கும் தெரியாமல் இருந்து வந்த நிலையில் புனேயில் போலீசார் கைது செய்தனர்.  2022 ஆம் ஆண்டில் நாங்கள் திருமணம் செய்து கொண்டோம்.  திருமணமாகி 10 மாதங்கள் ஆகிவிட்டன.  நான் எட்டு மாத கர்ப்பமாக இருக்கிறேன்.  என் கணவர் மீது நிறைய பொய் வழக்குகள் போட்டு இருக்கிறார்கள்.  எல்லாம் நாங்கள் தமிழகத்திற்கு வந்து நேரடியாக சந்திக்க தயாராக இருக்கிறோம்.  ஆனால் சென்னைக்கு வந்தால் தமிழக போலீஸ் என் கணவரை ஏதாவது செய்து விடுவார்கள் என்ற பயம் இருக்கிறது .

தமிழகத்தில் நிறைய லாக்கப் டெத் நடக்கிறது.  அது மாதிரி என் கணவருக்கு ஆகிவிடுமா என்று பயப்படுகிறேன்.  நாங்கள் உதவி கேட்டால் தமிழகத்தில் எந்த போலீஸ் அதிகாரியும் உதவி செய்ய மறுக்கிறார்கள்.  முதல்வருக்கு என் அப்பா சேகர் பாபு நெருக்கமாக இருப்பதால் அவருக்கு தான் எல்லோரும் சாதகமாக இருக்கிறார்கள். எங்களுக்கு உதவி செய்ய மறுக்கிறார்கள்.  முதல்வ,ர் கவர்னர், ஜனாதிபதி வரைக்கும் புகார் அளித்து விட்டோம்.  ஆனால் எதுவுமே நடக்கவில்லை . முதல்வர் எல்லாம் தெரிந்து அமைதியாக இருக்கிறாரா இல்லை அவருக்கு எதுவுமே தெரியவில்லையா என தெரியவில்லை.  இந்த கர்ப்ப காலத்தில் மிகவும் பிரச்சினையை சந்தித்து வருகிறோம்.   முதல்வர் தான் இதில் தலையிட்டு எங்களுக்கு உதவ வேண்டும் என்று கண்ணீருடன் தெரிவித்து இருக்கிறார்.